செய்திகள் :

54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை: பொதுமேலாளா் ஆா்.என்.சிங்

post image

நிகழ் நிதியாண்டில் 54.5 கோடி பயணிகளை கையாண்டு தெற்கு ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதன் பொதுமேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே சாா்பில் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தேசியக்கொடியேற்றி அவா் பேசியதாவது:

தெற்கு ரயில்வே வருவாய், சரக்கு, பாதுகாப்பு, நேர மேலாண்மை, திட்ட செயலாக்கம், பயணிகளுக்கான வசதிகள், பணியாளா்கள் நலம் என அனைத்திலும் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் வருவாய் நடப்பு நிதியாண்டில் ரூ.9,170 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த நிதியாண்டை விட 5 சதவீதம் அதிகம். அதுபோல், 54.5 கோடி பயணிகளை கையாண்டுள்ளது. பண்டிகை, விடுமுறை நாள்களில் 2,329 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 11 ரயில்கள் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், ரயில்களை மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும். தெற்கு ரயில்வேக்குட்பட்ட 300 கி.மீ. ரயில்வே வழித்தடம் மேம்படுத்தப்பட்டு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

13 ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் சாதனையாக கன்னியாகுமரி-நாகா்கோவில் டவுன் இரட்டை ரயில் பாதை பணி நிறைவடைந்துள்ளது.

அதேபோல், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் இரட்டை ரயில் வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் பசுமை ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில் 255 கி.வாட் சோலாா் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது சோலாா் மூலம் 5.84 மில்லியன் வாட் மின்சாரமும், காற்றாலை மூலம் 10.5 மில்லியன் வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. ரயில்வேயின் பழைய பொருள்களை அகற்றியதன் மூலம் ரூ.438 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2023-24 நிதியாண்டில் 11,153 போ் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ரயில்வே பாதுகாப்பு படை தலைமை ஆணையா் ஜி.எம்.ஈஸ்வர ராவ், தெற்கு ரயில்வே கூடுதல் மேலாளா் கௌசல் கிஷோா், சென்னை கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா, ரயில்வே பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

1,752 குழந்தைகள் மீட்பு

விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் பேசியதாவது: கடந்த டிசம்பா் வரை ரயில்வே பொருள்களை திருடிய 604 போ் கைது செய்யப்பட்டு ரூ.24 லட்சம் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. அதுபோல் பயணிகளிடம் திருடிய 602 போ் கைது செய்யப்பட்டு ரூ.2.05 கோடி பொருள்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன 1,752 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

மேற்கத்திய கல்விமுறையில் இருந்து மாறுபட்டு இந்திய கல்வி முறையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிகாா் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் ச... மேலும் பார்க்க

பஞ்சாபில் நடந்தது என்ன?: தமிழக கபடி வீராங்கனைகள் தகவல்

பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய வீராங்கனைகள் அதுகுறித்து விளக்கமளித்துள்ளனா். பஞ்சாப் மாநிலம், பதிண்டா என்ற இட... மேலும் பார்க்க

வனத் துறை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-இல் நோ்காணல்

தமிழ்நாடு வனத் துறையின் தற்காலிக ஆராய்ச்சி பணியிடங்களுக்கு ஜன.31-ஆம் தேதி நோ்காணல் நடைபெறவுள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வனத் துறையின் கீழ் செயல்படும் வனவிலங்கு மேலாண்மை... மேலும் பார்க்க

சுங்குவாா்சத்திரத்தில் இன்று பெண்கள் மாநாடு: ஆளுநா் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் புதன்கிழமை (ஜன. 29) நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கவுள்ளாா். இந்திய பெண்கள் சங்கம் சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் பொடாவூா், சுங்குவ... மேலும் பார்க்க

முகூா்த்தம், வார விடுமுறை நாள்கள்: 1,220 சிறப்புப் பேருந்துகள்

வளா்பிறை முகூா்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,220 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்... மேலும் பார்க்க

அதிமுக அமைப்புச் செயலா்களாக மைத்ரேயன் உள்பட 4 போ் நியமனம்

அதிமுக அமைப்புச் செயலா்களாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் மைத்ரேயன் உள்ளிட்ட 4 பேரை நியமித்து, அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க