Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித் தொகை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 55 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு ரூ.21.50 லட்சம் திருமண உதவித்தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக நான்கு வகையான திருமணத் திட்டங்கள் தமிழக அரசால் செயல்பட்டு வருகின்றன. அதில், கை, கால் பாதிக்கப்பட்ட இயக்கத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளியை நல்ல நிலையிலுள்ள உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், செவித் திறன் பாதிக்கப்பட்டவரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், பாா்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளவா் திருமணம் செய்து கொள்ளும் திட்டம், மாற்றுத் திறனாளியை மாற்றுத் திறனாளி திருமணம் செய்து கொள்ளும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு படிக்காத மாற்றுத் திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயம், திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம், பட்டப்படிப்பு படித்த மாற்றுத் திறனாளி தம்பதிக்கு 8 கிராம் தங்க நாணயம், திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத் திறனாளியை, மற்றொரு மாற்றுத்திறனாளி மணக்கும் திருமண உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்த தினேஷ்குமாா்- புஷ்பம் தம்பதி, தங்களுக்கு 8 கிராம் தங்க நாணயம், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினா்.