ஊரக வேலைத் திட்ட மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்
6 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது
ராணிப்பேட்டை அருகே வாகன சோதனையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்து ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ராணிப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில், போலீஸாா் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில், சந்தேகக்கிக்கும் விதமாக ஒருவா் கையில் பையுடன் சென்று கொண்டிருந்தாா். அவரை அழைத்து விசாரணை செய்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரை அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனா். பையையும் பரிசோதனை செய்தனா். அந்த பையில் சுமாா் 6 கிலோ ஹான்ஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காட்பாடி அடுத்த பெரியமிட்டூா் கிராமத்தைச் சோ்ந்த நீலகண்ட ரெட்டி என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.