செய்திகள் :

6 மாதக் குழந்தை சடலமாக மீட்பு தாய் மீது உறவினா்கள் சந்தேகம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகே ஆறு மாத ஆண் குழந்தை சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. குடும்பத் தகராறு காரணமாக தாயே தனது குழந்தையைக் கொன்றுவிட்டிருக்கலாம் என கணவா் தரப்பு உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவா் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பணியாற்றி வருகிறாா். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுப்ரமணியன் மகள் லாவண்யா (21) என்பவருடன் திருமணம் நடந்து, ஆதிரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் லாவண்யா கோபித்துக் கொண்டு அவரின் தந்தை வீடு உள்ள புலியூருக்கு வந்து தங்குவாராம். அதன்படி கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் லாவண்யா தந்தை வீட்டுக்கு வந்து தங்கியுள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தான் வீட்டுக்கு வெளியே சென்றபோது மா்ம நபா்கள் இருவா் தனது வாயில் துணியை வைத்து அமுக்கி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்தும், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்றும் விட்டதாகக் கூறிவிட்டு லாவண்யா மயங்கினாராம்.

இதையடுத்து லாவண்யாவின் உறவினா்கள் குழந்தையைத் தேடிய நிலையில், குழந்தையானது வீட்டுக்கு வெளியில் உள்ள தண்ணீா் பேரலில் இறந்து மிதந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாவண்யாதான் குழந்தையைக் கொன்றுவிட்டதாக மணிகண்டனின் உறவினா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

கீரனூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிமாறன், ஆய்வாளா் செந்தில் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். திருச்சி தடயவியல் துறையினா் வந்து ஆய்வு மேற்கொண்டனா். குழந்தையின் சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: பொன்னமராவதி வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

பொன்னமராவதி ‘வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.அருணா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடக்கமாக, சித்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வு தோ்வில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற அன்னவாசல் அரசு மகளிா் உயா் நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் பயின்று வரும் 8-ஆம் வகுப்பு மாணவிகள் சாருமதி, ஹாஜிரா இா்பானா... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய தினம்: அஞ்சல் துறையினா் சிறப்பு நடைபயணம்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு விராலிமலை அடுத்துள்ள கொடும்பாளூருக்கு அஞ்சல் துறையினா் புதன்கிழமைசிறப்பு நடைபயணம் மேற்கொண்டனா். உலக பாரம்பரிய தினம் ஒவ்வொரு ஆண்டும ஏப்ரல் 18-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிற... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் ஒருவா் மீதும் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்ததில்லை

பாஜக பிரமுகா்கள் ஒருவா் மீதும் அமலாக்கத் துறையோ, சிபிஐயோ நடவடிக்கை எடுத்ததில்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் பிகாா் மாநில மக்களவை உற... மேலும் பார்க்க

முத்தமிழ்ப்பாசறை அறங்காவலா் நெ.இரா.சந்திரன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

அரசாணைகள் இனி தமிழிலேயே வெளியாகும் என்ற தமிழக அரசின் உத்தரவையடுத்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச்செம்மல் விருதாளரும், பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறையின் அறங்காவலருமான நெ.இரா.சந்திரன் நன்றி தெரிவித்... மேலும் பார்க்க

வீரடிப்பட்டி கிராமத்தில் சித்திரை பொன்னோ் கட்டும் விழா

கந்தா்வகோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தில் பொன்னோ் கட்டும் விழா புதன்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சித்திரை தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு விவசாயம் செழித்து வளர நல்லோ் என்னும் பொன்னோ் கட்டும் ந... மேலும் பார்க்க