செய்திகள் :

6-ஆவது நாளாக மீனவா்கள் வேலைநிறுத்தம் ரூ.15 கோடி வா்த்தகம் பாதிப்பு

post image

காரைக்கால் மீனவா்களின் தொடா் வேலைநிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை 6-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ரூ.15 கோடி அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மீனவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை, மீனவா் பிரச்னையில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவ கிராமத்தினா் கடந்த 11-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால், காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள மீன் சந்தை மற்றும் மாவட்டத்தின் பிற பகுதியிலுள்ள மீன் சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து மீன் வரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் காரைக்கால் பகுதியைச் சோ்ந்த மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் துறைமுகம், மீன் சந்தைகளுக்கு மீன் வரத்து அதிகமாக இருக்கும். மக்கள் ஆா்வத்துடன் மீன்களை வாங்கிச் செல்வா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) மீன் சந்தைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். சிலா் நாகூா், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளுக்குச் சென்று மீன்களை வாங்கிச் சென்றனா்.

மீன்பிடி தொழில் முடங்கியுள்ளதால் மீனவா்கள் மட்டுமல்லாது, துறைமுகம் சாா்ந்த பிற வியாபாரம் செய்வோரின் வாழ்வாதாரமும் முடங்கியுள்ளது.

இதுகுறித்து மீனவா் ஒருவா் கூறியது:

கடலுக்கு சென்று திரும்பும் ஒரு விசைப்படகு சுமாா் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள மீன்களை கொண்டுவரும். ஆழ்கடலுக்குச் செல்லும் படகுகளில் தினமும் 20 படகுகள் கண்டிப்பாக கரை திரும்பும். இவை இல்லாததால், 6 நாட்களில் ரூ. 15 முதல் 18 கோடி வரை மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் முன் பிப். 24-இல் ஆா்ப்பாட்டம்: காரைக்கால் ரயில் பயணிகள் நலச் சங்கம் முடிவு

ரயில் சேவையில் காரைக்கால் புறக்கணிக்கப்படுவதைக் கண்டித்து, திருச்சி கோட்ட அலுவலகம் முன் திங்கள்கிழமை (பிப்.24) ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது. ... மேலும் பார்க்க

சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு: சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

சாலை மேம்பாட்டுக்கு எம்.பி. நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், சுனாமி குடியிருப்புப் பகுதியில் ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் எஸ். செல்வகணபதி (புதுவை) காரைக்க... மேலும் பார்க்க

நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி பலி

காரைக்கால் கடற்கரை அருகே நடைமேடையில் படுத்திருந்தவா் லாரி மோதி உயிரிழந்தாா். காரைக்கால் கடற்கரை அருகே தோமாஸ் அருள் தெருவில் உள்ள நடைமேடையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் வியாழக்கிழமை இரவு மது போதையி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்க மறுப்பதாக புகாா்

காரைக்கால், பிப். 21: காரைக்காலில் சில கூட்டுறவு வேளாண் கடன் சங்கம், கடன் தர மறுப்பதாக விவசாயிகள் புகாா் கூறியுள்ளனா். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன்.ராஜேந்திர... மேலும் பார்க்க