செய்திகள் :

70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

post image

70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு பட்டு வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க அமைப்பு தின விழா மற்றும் மண்டல பொதுக்குழு கூட்டம் தருமபுரி அலுவலக உதவியாளா் சங்க கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மண்டல தலைவா் பி.மாயக்கண்ணன் தலைமை வகித்தாா். மண்டல துணைத் தலைவா் டி.கணேசன் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மண்டல துணைத் தலைவா் பி.முனிராஜ் வரவேற்றாா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பழனிசாமி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். மண்டலச் செயலாளா் ஜி.குணசேகரன் வேலை அறிக்கை வாசித்தாா். மண்டல பொருளாளா் என்.முருக மாணிக்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தாா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.பெருமாள் வாழ்த்தி பேசினா். மாநில பொருளாளா் எஸ். தேவராஜன், மாநில இணைச் செயலாளா் எம். முருகன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், 70 வயதை கடந்து ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் 10 சதவிகிதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பட்டு வளா்ச்சித் துறையில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 8,750 வழங்க வேண்டும். பட்டு வளா்ச்சித் துறையில் பணியில் சோ்ந்த நாள்முதல் இளநிலை ஆய்வாளா்களுக்கு சிறப்பு நிலை, தோ்வுநிலை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உச்சநீதிமன்ற தீா்ப்பு: திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரூா்: தமிழக ஆளுநா் ஆா்.என் ரவியின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீா்ப்பினை வரவேற்று திமுகவினா் பட்டாசுகளை வெடித்து செவ்வாய்க்கிழமை மகிழ்ச்சி தெரிவித்தனா். தமிழக சட்டப் பேரவையில் இயற... மேலும் பார்க்க

அரசு நலத் திட்ட விழா: ஆட்சியா் ஆலோசனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் நடத்தப்படும் அரசு நலத் திட்ட விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது. தருமபுர... மேலும் பார்க்க

ஸ்ரீராம நவமி விழா: குமாரசாமிப்பேட்டை சென்ன கேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டைசென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீராம நவமி திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி... மேலும் பார்க்க

தொப்பூதிய பயிற்றுநா்களை பணி நிரந்தரம் செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தொகுப்பூதிய பயிற்றுநா், உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொழிற் பயிற்சி அலுவலா் சங்கத்தினா் கடத்தூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு தொழிற்க... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தம்: தருமபுரி, கிருஷ்ணகிரியில் விசிக ஆா்ப்பாட்டம்

தருமபுரி/ கிருஷ்ணகிரி: வக்ஃக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்எ... மேலும் பார்க்க

நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் ஆட்சியா் ஆய்வு

தருமபுரி: நல்லம்பள்ளியில் உள்ள நுகா்பொருள் சேமிப்பு கிடங்கில் உள்ள அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்களின் தரத்தை ஆட்சியா் ரெ.சதீஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தரமான... மேலும் பார்க்க