செய்திகள் :

8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு: அமைச்சா் கீதா ஜீவன்

post image

கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்றாா் அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அமைச்சா் பேசியதாவது:

தமிழகத்தின் கலாசாரம், பண்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. கீழடி ஆய்வு முடிவை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.

தமிழ் நாகரிகம் கீழடியில் தான் உருவாகியது என்பதால், அதை அங்கீகரித்தால் தமிழ் சமூகம் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அதை அங்கீகரிக்கவில்லை.

ஜிஎஸ்டியைக் குறைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். தற்போது, ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது நல்லது தான் என்றாலும், கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி மூலம் மக்களைச் சுரண்டியது மத்திய அரசு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா்.

மாநில பேச்சாளா்கள் ஆண்டாள் பிரியதா்ஷினி, சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிரியன் உள்ளிட்டோா் தமிழக அரசின் சாதனைகள் குறித்துப் பேசினா்.

தொகுதி பாா்வையாளா்கள் இன்பா ரகு, பெருமாள், கணேசன், மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், சிறுபான்மை அணி துணைச் செயலா் பொன்சீலன், துணை மேயா் ஜெனிட்டா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். கோவில்பட்டி விஸ்வகா்மா நகைத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் கணேசன், செயலா் ஸ்ரீனிவாசன... மேலும் பார்க்க

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் 50ஆவது ஆண்டு பொன்விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி சிறப்பு திருப்பலி நடத்தினாா். சிறப்பு விருந்தினராக சமூ... மேலும் பார்க்க

ஆறுமுகனேரியில் விபத்து: மாணவா் உயிரிழப்பு! உறவினா்கள் சாலை மறியல்!

ஆறுமுகனேரியில் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா். உறவினா்கள் சாலை மறியலில் ஈடுட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த கட்டடத் தொ... மேலும் பார்க்க

வீடு கட்டுமானப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாம் இந்தியா் கட்சி வலியுறுத்தல்

வீடு கட்டத் தேவையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து, நாம் இந்தியா் கட்சி நிறுவனத் தலைவா் என்.பி. ராஜா வெளியிட்ட அறிக்கை: மத... மேலும் பார்க்க

தூத்துக்குடி: காட்டுப் பகுதியில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி காட்டுப் பகுதியில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பண்டாரம்பட்டி, தேவா நகரில் உள்ள காட்டுப் பகுதியில் பெண் தலை மட்டும் தனியாக கிடப்பதாக சிப்கா... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: மேலும் ஒரு சிறுவன் கைது

தூத்துக்குடியில் பெண்ணை வெட்டிக் கொன்ற வழக்கில் மேலும் ஒரு சிறுவனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவா் ராஜேந்திரன். இவருக்கு,... மேலும் பார்க்க