செய்திகள் :

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜிஎஸ்டியை குறைத்திருக்கலாமே? முதல்வர் கேள்வி!

post image

8 ஆண்டுகளுக்கு முன்பே ஜி.எஸ்.டி.யை குறைத்திருக்கலாமே என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைக்கும் சீர்திருத்தம் நாடு முழுவதும் திங்கள்கிழமை அமலானது.

இதனால் முன்பைவிட அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிர்சாதனங்கள், கார்கள் வரை, அத்தியாவசிய மருந்துகள் முதல் காப்பீடுகள் என சுமாா் 375 பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளது.

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் பதிவில் தெரிவித்திருப்பதாவது”

"ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம்" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்? 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே?

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது. இந்த உண்மையை மத்திய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகிறது.

மற்றொரு புறம், மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது. ஹிந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது. இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும்?

தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது. கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள், உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

Chief Minister Stalin has raised the question of whether GST could have been reduced 8 years ago.

செப்.25 முதல் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் செப். 25 முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று (22-09-2025) காலை வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஒரு காற்... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒருநாள் பயணமாக தில்லி சென்றுள்ளார். அங்கு, புதிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை இன்று(செப். 23) சந்திக்கிறார்.நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச்... மேலும் பார்க்க

ஒரே டிக்கெட்டில் பயணம்! சென்னை ஒன் செயலியைப் பயன்படுத்துவது எப்படி?

இந்தியாவிலேயே முதல்முறையாக, அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘சென்னை ஒன்’ செயலி திங்கள்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியைப் பயன்படுத்தி ம... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!

மதுரையில் வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்டார் விலங்கு நல ஆர்வலர் ஸ்நேக் பாபு.மதுரை பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு... மேலும் பார்க்க

அக். 14ல் சட்டப்பேரவை கூடுகிறது: அப்பாவு

வருகிற அக். 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலக பேரவைத் தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அப்பாவு, வருகிற அக். 14 ஆம்... மேலும் பார்க்க

முக்கிய ஆலோசனை! முதல்வர் தலைமையில் தொடங்கிய திமுக எம்.பி.க்கள் கூட்டம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ... மேலும் பார்க்க