90 Hours Job : `எவ்வளவு நேரம் மனைவியை பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்?' - L&T தலைவர் பேச்சால் சர்ச்சை
போன மாதம் நாராயண மூர்த்தி... இந்த மாதம் SN சுப்பிரமணியன் என கடந்த சில நாட்களாக 'வேலை நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்' என்று சில நிறுவனங்களின் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.
நாராயண மூர்த்தி, '70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்' என்று கூறியதைக்கூட ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்ளலாம்... எல் அண்ட் டி நிறுவன தலைவர் SN சுப்பிரமணியன் இன்னும் ஒருப்படி மேலே போய் 'வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்' என்று பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
எல் எண்ட் டி தலைவர் SN சுப்பிரமணியன் தனது பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், `எனக்கு உங்களை (தொழிலாளர்களை) ஞாயிற்றுக்கிழமை வேலை பார்க்க வைக்க முடியவில்லையே என்று பெரிய வருத்தம் உள்ளது. உங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை பார்க்க வைத்தால் மிகவும் சந்தோஷமடைவேன். நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்து வருகிறேன்.
வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்... எவ்வளவு நேரம் உங்கள் மனைவியையே பார்த்துகொண்டு இருக்க முடியும்? மனைவிகளும் எவ்வளவு நேரம் கணவரை பார்த்துகொண்டு இருக்க முடியும்? ஆபீஸுக்கு வாருங்கள்...வேலை செய்ய தொடங்குங்கள்" என்று பேசியுள்ளார்.
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.