96, மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய விருப்பம்: பிரேம் குமார்
இயக்குநர் பிரேம் குமார் 96, மெய்யழகன் ஆகிய படங்களை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
தற்போது, 96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால், நடிகர்களின் தேர்வு குழப்பங்களால் அப்படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.
இந்த நிலையில், இந்திய திரைக்கதை எழுத்தாளர்கள் விழாவில் கலந்துகொண்ட பிரேம் குமார், ” என் அப்பா வட இந்தியாவில் வளர்ந்த தமிழர் என்பதால் ஹிந்தியில் திரைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினேன். அதனால், 96 திரைப்படத்தை முதலில் ஹிந்தியில் எடுக்கத்தான் ஆசைப்பட்டேன். நடிகர் அபிஷேக் பச்சனை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால், அவர் அப்போது என் தொடர்பில் இல்லை.
இன்றும் நேரடியாக ஹிந்தியில் திரைப்படம் எடுக்க ஆசை இருக்கிறது. அதேநேரம், 96 மற்றும் மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான விருப்பமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: சசிகுமாரின் ஃப்ரீடம் வெளியீடு ஒத்திவைப்பு! ஏன்?