செய்திகள் :

``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

post image

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டிஷனிங் இல்லை என்று அவர் கூறியுள்ளார். அங்கு கடுமையான வெப்பம் ஏற்பட்டு மூச்சு திணறல் அளவுக்கு சென்றதாக மணமகள் கூறியுள்ளார்.

சித்தரிப்பு படம்

”இதனை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்த இடம் மனிதாபிமானமற்ற சூழல்” என்று கூறி ஏர் கண்டிஷனரை ஏற்பாடு செய்யுமாறு மணமகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் இரு குடும்பத்தினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி பெரும் வாக்குவாதம் ஏற்பட, இந்த விவாகரத்தில் போலீஸ் தலையிடும் நிலை ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "தனக்கு மரியாதை இல்லாத, அடிப்படை வசதி ஏற்பாடு செய்ய முடியாத ஒரு வீட்டில் தனது வாழ்க்கை நரகமாக மாறும் என்று மணமகள் தனது பெற்றோரிடம் கூறி, திருமணம் செய்ய மறுத்துள்ள்ளார்" என்று தெரிவித்தனர்.

சமரச பேச்சு வார்த்தைகள் செய்ய முயன்றும், அது தோல்வியில் முடிந்துள்ளது. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடைபெறயிருந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.

மேலும் மணமகனின் குடும்பத்தினர் அதிக வரதட்சணை கேட்பதாக கூறி மணமகளின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'ஒரு நாள் கோடீஸ்வரி' - 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதி... மேலும் பார்க்க

`ஸ்கூட்டி ரூ. 1 லட்சம், நம்பர் ரூ. 14 லட்சம்' - ஏலத்தில் போட்டிபோட்டு வாங்கிய இமாச்சல் நபர்

இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவர் ரூ. 1 லட்சத்துக்கு ஸ்கூட்டி வாங்கி, அதற்கு போக்குவரத்துத் துறையில் ரூ. 14 லட்சத்துக்கு விஐபி நம்பர் வாங்கியது பேசுபொருளாகியிருக்கிறது.இதில், சோலன் மாவட்டதிலுள்ள பட்டியைச் ... மேலும் பார்க்க

ஒரே சமயத்தில் தேர்வெழுதிய தந்தை, மகன் போலீஸ் வேலைக்கு தேர்வு.. ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு!

படிப்புக்கும், வேலைக்கும் வயது ஒரு தடை கிடையாது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள உதயராம்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் யஷ்பால் சிங்(41).... மேலும் பார்க்க

ஹைதராபாத் மேம்பாலத்தில் ஓட்டமெடுத்த ஒட்டகம்; சவாரியில் சிக்கிய இளைஞரை மீட்ட சம்பவம்.. வைரல் காட்சி!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான மேம்பாலத்தில், ஒருவர் ஒட்டகத்தின் மீது ஆபத்தான முறையில் சவாரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தின் பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலையில் இந்த சம்பவம் நடந... மேலும் பார்க்க

``திருமணத்திற்கு வராத விருந்தினர்களுக்கு ரூ.4,339 அபராதம்'' - மணமகள் சொல்வது என்ன? வைரலாகும் பதிவு

திருமணம் என்றாலே பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கேட்டரிங் முதல் டெக்கரேஷன் வரை திருமண நிகழ்விற்காக ஒரு பெரிய தொகையை செலவிடுவார்கள்.குறிப்பாக விருந்தினர்களின் எண்ணிக்கை பொறுத்து உணவுகள் ஏற்பாடு செ... மேலும் பார்க்க

Telegram: ``நான் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அப்பா'' - டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ்

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரெஞ்சு பத்திரிகையான லு பாயிண்டி செய்தியிடம் அளித்த பேட்டியி... மேலும் பார்க்க