செய்திகள் :

ADMK இரட்டை இலை விவகாரம்: `தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக்காலத் தடை' - உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, திண்டுக்கல் சூரியமூா்த்தி என்பவர் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 4 வாரங்களுக்குள் தோ்தல் ஆணையம் விசாரித்து முடிவை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, புகழேந்தி உள்ளிட்டோர் ஏற்கெனவே தோ்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், `எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவுக்கு 27-ம் தேதிக்குள் பதில் அளிக்கவும், அதுவரை இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்க இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது" என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

Cut செய்யப்படும் லைவ் - சட்டமன்றத்தில் நடப்பதை காட்ட அஞ்சுகிறதா DMK அரசு? | ADMK | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* UGC விதிமுறைகளுக்கு எதிராக இன்று சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம்?* நன்கொடைப் பெட்டியில் விழுந்த ஐபோன் ஏலத்தில் விற்கப்பட்டதா?* நியமிக்கப்பட்ட நேரத்தில் அமைச்சர்கள் க... மேலும் பார்க்க

TVK : 'தை பிறந்தவுடன் புதிய அறிவிப்பு? ; திடீர் நிர்வாகிகள் கூட்டம்'- விஜய் முகாமில் என்ன நடக்கிறது?

விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தின் முடிவில் கட்சியின் புதிய நிர்வாகிகள் இறுதி செய்யப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.TVK விஜய்கடந்... மேலும் பார்க்க