செய்திகள் :

Ajith: ``இப்ப புரியுதா நான் ஏன் சிவாவ விடலைன்னு'' - சூர்யாவிடம் அஜித் சொன்ன விஷயம்!

post image

நடிகர் சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது கங்குவா திரைப்படம். இதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த திரைப்பட முந்தைய தமிழ் சினிமா வசூல் சாதனைகளை முறியடிக்கும் என்றுக் கூறியிருக்கிறார்.

சிறுத்தை, வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சிறுத்தை சிவா நடிகர் அஜித்தின் விருப்பமான இயக்குநராக திகழ்கிறார். வீரம், விவேகம், விஸ்வாசம் என அஜித் - சிவா கூட்டணியில் சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியிருக்கின்றன.

அஜித் - சிவா

கங்குவா திரைப்படத்தின் புரோமோஷனில் இறங்கியிருக்கிறது படக்குழு. சமீபத்தில் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, நடிகர் அஜித்துடனான சந்திப்புக் குறித்துப் பேசினார்.

"நான் சமீபத்தில் அஜித் சாரை சந்தித்தேன். அவர் என்னிடம், 'இப்ப தெரியுதா நான் ஏன் சிவா சாரை விடலைன்னு' என்று கூறினார். நீங்கள் ஒருமுறை சிவாவுடன் பணியாற்றினால், அவர் வேறொரு நடிகருடன் வேலை செய்வதைப் பார்க்க பொறாமைபடுவீர்கள். அந்த அளவு படப்பிடிப்பு நிறைவாக இருக்கும்." என்று பேசினார் சூர்யா.

கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. பான் இந்தியா அளவில் இந்த படத்தை எடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

கங்குவா

பாலிவுட் நடிகையான திஷா பட்டானி இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். நட்டி (எ) நட்ராஜன், ரெட்டின் கிங்ஸ்லி, யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டப்போ எனக்கு நம்பிக்கையே வரல! - Redin & Sangeetha | Thala Diwali

விகடனின் இந்த பிரத்யேகமான நேர்காணலில் நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் அவரது மனைவி சங்கீதாவும் நம்மிடையே பல விஷயங்களை பகிர்ந்துள்ளனர். இந்த வேடிக்கையான மற்றும் நேர்மையான உரையாடலில், அவர்கள் தங்கள் திருமணம்,... மேலும் பார்க்க

10 Years Of Kaththi : `செல்ஃபி புள்ள பாடல் உருவானது இப்படிதான்!' - அனிருத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

`கத்தி' திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.ஏ. ஆர். முருகதாஸுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்த திரைப்படம் `கத்தி'. அப்போது வரை வெறும் 5 படங்கள் மட்டும் இசையமைத்திருந்த 24 வயது... மேலும் பார்க்க

Vettaiyan: `சின்ன வயசுல படையப்பா பாடலைதான் அதிகமாக பாடுவேன்; இப்போ அவர் படத்துல பாடிட்டேன்' - பாலாஜி

அனிருத் தான் இசையமைக்கும் படங்களின் மூலம் பல சுயாதீன கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.சமீபத்தில் வெளியான `வேட்டையன்' திரைப்படத்தில் இடைபெற்றிருந்த `க்ளீன் ஷாட்' பாடலின் மூலம் பாலாஜி சுயாதீன இசைக்... மேலும் பார்க்க

Kanguva: புரொமோஷனில் கங்குவா படக்குழு; ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட சூர்யா! | Photo Album

'கங்குவா''கங்குவா'சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய... மேலும் பார்க்க

Simbu: `இனிமேல் நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க!' - சிம்புவின் மாஸ்டர் பிளான் லைப் அப்!

`பத்து தல' திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், " இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் என் தலைவன் இப்படி அப்படி என்றெல்லாம் என்னை பற்றி பேசாதீர்கள். என்னுடைய கஷ்ட காலத்தில் நீங்கள் உடன் இருந... மேலும் பார்க்க