மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்
America:``அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும்"- மக்களை எச்சரித்த ஜோ பைடன்
அமெரிக்கா அதிபர் பதவியிலிருந்து இன்னும் சில தினங்களில் விலகும் ஜோ பைடன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ``அமெரிக்காவில் ஒரு சிலப் பணக்காரர்களிடையே ஆபத்தான அதிகாரக் குவிப்பு போன்ற சூழல் உருவாகியிருக்கிறது. அதனால், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்று அமெரிக்காவில் பெரும் செல்வத்துடனும், செல்வாக்குடனும் தன்னலக்குழு உருவாகியிருக்கிறது. இது அமெரிக்காவின் ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கும், அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளுக்கு எதிராக அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. சமீபகாலமாக தவறாகப் பரப்பப்படும் தகவல்களால் அமெரிக்க மக்கள் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
மறுபக்கம் ஊடக சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதிகாரக் குவிப்பு அதிகார துஷ்பிரயோகத்துக்குதான் வழிவகுக்கும். அதனால், உண்மையான செய்திகளை, தகவல்களை வெளியிடுபவர்கள் மெல்ல காணாமல் போய்விடுகிறார்கள். நான் இந்த நாட்டின் மீதான என்னுடைய முழு அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். அதற்கு ஈடாக மக்களும் என்மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களின் ஆதரவைப் பெற்ற பெருமிதத்துடன் விடைபெறுகிறேன்" என உருக்கமாகவும், மக்களை எச்சரிக்கும் விதமாகவும் உரையாற்றினார்.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாம் முறை டொனால்ட் ட்ரம்ப் 20-ம் தேதி பதவியேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.