வெளிநாட்டுப் பறவையை தீண்டிய நாகப் பாம்பு! வனப்பகுதியில் விடுவிப்பு!
Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்'' - அமித் ஷா பேட்டி
மோடியும், அமித் ஷாவும் பாஜகவின் இரட்டைப் பெரும் தூண்கள். பிரதமராக மோடி வலம் வர, கட்சியின் தேசியப் பிரச்னையிலிருந்து, உள்ளூர் உட்கட்சிப் பிரச்சனை வரை பஞ்சாயத்து பண்ணி அடுத்தடுத்த வெற்றிக்காக கூட்டணியைக் காப்பாற்ற வியூகங்கள் வகுத்து வருபவர் அமித்ஷா.
கடந்த பத்து ஆண்டுகளில் இந்த இரண்டு பேரின் பெயர் அடிபடாமல் எந்தவொரு அரசியல் நகர்வும் இருந்ததாக இல்லை.
இந்நிலையில் NDTVக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் ஒன்றில் மோடியின் சிறந்த தலைமைப் பண்புகள் பற்றி பகிர்ந்துகொண்டிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

`ஒளிவு மறைவு இருக்காது'
மோடி குறித்துப் பேசியிருக்கும் அமித்ஷா, "மோடியைவிடவும் மிகவும் பொறுமையான, எதையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்கும் பண்புகொண்ட நபரை நான் பார்த்ததே இல்லை.
மோடியின் இந்தக் குணத்தை எப்போதும் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எந்தவொரு மீட்டிங்கிலும் எல்லோருடைய கருத்தையும் கேட்டுவிட்டு, கடைசியில்தான் பேசுவார். அவரிடம் எந்தவொரு ஒளிவும் மறைவும் இருக்காது."
நாடாளுமன்றத்தில் எல்லோருக்கும் பேசுவதற்கு அனுமதி கொடுப்பார். எதிர்க்கட்சியினர் வைக்கும் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை ஸ்டாண்டிங் கமிட்டிக்கு அனுப்பி விசாரித்து பரிசீலனை செய்வார். எல்லாத் துறைகளின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்பார்.

கடந்த 24 வருடங்களில் விடுமுறையே எடுக்காத ஒரு நபர் உண்டென்றால் அது பிரதமர் மோடிதான். அந்தமாதிரியான அர்ப்பணிப்பு குணம் சும்மா வராது, மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தால்தான் வரும்.
இதுவரை இருந்த பிரதமர்களில் மிகவும் பிரபலமானவர் பிரதமர் மோடி என்று இந்தியாவும், உலகமும் பாராட்டுகிறது. பிரதமர் மற்றும் முதலமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவரும் பிரதமர் மோடிதான்.
`முதுகெலும்பு கொடுத்த தலைவர்'
வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பார்த்தால், இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகள், வளர்ச்சிகள் அனைத்தும் மோடியின் ஆட்சி காலத்தில்தான் நடந்திருக்கும். இதுவரை வரலாறு கண்டிராத ஒரே பிரதமர் மோடிதான் என்று உறுதியாகச் சொல்வேன்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் முதுகெலும்பற்றதாக இருந்தன. அதற்கு முதுகெலும்பு கொடுத்த தலைவர் மோடி" என்று மோடி குறித்து பெருமிதத்துடன் பாராட்டிப் பேசியிருக்கிறார் அமித் ஷா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs