Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ ...
Apollo: அப்போலோ நடத்திய 'பெடல் பிங்க்' சைக்கிளத்தான் நிகழ்வு
மார்பக புற்றுநோய் விழிப்புணர்விற்காக திருவள்ளூரில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிட்டல்ஸ், வானகரம் ஆகியவை ஒருங்கிணைந்து "பெடல் பிங்க்" என்ற பெயரில் ஒரு சைக்கிளத்தான் நிகழ்வை நடத்தின.
மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு - திரு. எஸ்.எம்.நாசர், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் நகராட்சி தலைவர் திருமதி பி.உதயமலர் பாண்டியன், திருவள்ளூர் நகராட்சியின் துணைத் தலைவர் திரு.சி.வி. ரவிச்சந்திரன் மற்றும் திருவள்ளூர் ரோட்டரி சங்கத் தலைவர் எச்.ஜெய பிரகாஷ், வானகரம், அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ்ன் மருத்துவ புற்றுநோயியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமானடாக்டர் சுரேஷ் எஸ் மற்றும் வானகரம், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை துறை தலைவர் டாக்டர். எஸ். கௌதமன், வானகரம், அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் புற்றுநோயியல் துறையின் முதுநிலை ஆலோசகர், துறைத்தலைவர் டாக்டர். கே. ஹரீஷ் குமார், வானகரம், அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ்–ன் புற்றுநோயியல் அறுவை சிகிச்சைதுறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் மதுபிரியா ஆர்.ஜி.எஸ், ஆகியோர் இந்த சைக்கிளத்தான் நிகழ்வை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.எம்.நாசர், “மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சுகாதாரம் சார்ந்த ஒரு விஷயம் மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பொறுப்பாகும். 'பெடல் பிங்க்' சைக்கிளத்தான் நிகழ்வின் மூலம், ஒவ்வொரு பெண்ணும் தனது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிப்பதும் மற்றும் குடும்பங்கள் ஒருவரையொருவர் ஆதரிப்பதற்கு அதிகாரமளிப்பதும் நமது நோக்கமாகும். மேலும் இந்த முக்கியமான முன்தடுப்பு மற்றும் சிகிச்சை பராமரிப்பு செய்தியினை பரப்புவதில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வானகரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மக்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.” என்று கூறினார்.
"பெடல் பிங்க்" சைக்கிளத்தான் நிகழ்வானது, அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ் செயல்படுத்தி வரும் TalkPink என்ற பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது, மார்பக ஆரோக்கியம் பற்றிய வெளிப்படையான உரையாடல்களை வளர்ப்பதையும் மற்றும் உரிய காலஅளவுகளில் மார்பக சுய பரிசோதனைகளை பெண்கள் செய்து கொள்ளுமாறு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரியின் அலுவலக மைதானத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சைக்கிளத்தான் நிகழ்வு, திருவள்ளூர் ஆர்கேபி மருத்துவமனையில் நிறைவடைந்தது. திருவள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் உட்பட, 200 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் தங்கள் ஆதரவை வெளிக்காட்டவும் மற்றும் சுகாதார முயற்சிகளில் சமூகமாக ஒருங்கிணைந்து ஈடுபடுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் இந்த சைக்கிளத்தான் நிகழ்வில் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
வானகரம், அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ் – ன் மருத்துவ புற்றுநோயியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் சுரேஷ் எஸ், கூறுகையில், “எந்த வகையான புற்றுநோயாக இருந்தாலும், அதன் பாதிப்பை மருத்துவ நிபுணர்களாகிய நாங்கள் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகிறோம். 'பெடல்பிங்க்' சைக்கிளத்தான் போன்ற முன்முயற்சிகள் மூலம் பரந்துபட்ட சமூகத்திற்கு இச்செய்தியை பரப்புவதே எமது நோக்கம். எண்ணற்ற உயிர்களை காப்பாற்றுவதற்கு உதவக்கூடிய இந்த உன்னதமான நோக்கத்திற்கு பொதுமக்களின் பரவலான, ஆதரவையும் உற்சாகத்தையும்காண்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் வழங்குகிறது.”
வானகரம், அப்பல்லோ கேன்சர் சென்டர்ஸ் – ன் புற்றுநோயியல் அறுவை சிகிச்சைதுறையின் முதுநிலை நிபுணர்டாக்டர் மதுபிரியா ஆர்.ஜி.எஸ்., பேசுகையில், ''மார்பக புற்றுநோய் மீதானவிழிப்புணர்வு என்பது, பெண்களுக்குஅதுபற்றி கற்பிப்பது மட்டுமல்ல; அவர்களது ஆரோக்கியத்தின் மீது சுயமுனைப்புடன் பொறுப்பேற்க அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்ததாகும். நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற வழக்கமானஉடற்பயிற்சிகள் மற்றும் குறித்த காலஅளவுகளில் மார்பக சுய பரிசோதனை மற்றும்ஸ்க்ரீனிங் சோதனை மூலம் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல் ஆகிய நடவடிக்கைகள், மார்பக புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை 'பெடல் பிங்க்' போன்றமுன்னெடுப்பு நிகழ்வுகள் நமக்கு நினைவூட்டுகின்றன,” என்று குறிப்பிட்டார்.
மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை பெறுவதை ஊக்குவிப்பதன் மூலம் தங்களது உடல்நலம் மீது பெண்கள் முன்னுரிமையளிக்குமாறு செய்வது ‘பெடல் பிங்க்’ நிகழ்வின் நோக்கமாகும். இந்நிகழ்விற்கு திருவள்ளூர் ட்ரெக்கர்ஸ், திருவள்ளூர் ரோட்டரி கிளப் மற்றும் ஆர்கேபி மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகியவை சிறப்பான ஆதரவு வழங்கின. #TalkPink பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மீது சமூகத்தினர் மத்தியில் இந்த முக்கியமான செய்தியை பரப்பும் அதே வேளையில், உடல்சார் செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியை ஊக்குவிக்க அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், வானகரம் முனைப்பு காட்டுகிறது.
#TalkPink பரப்புரையானது, மார்பக புற்றுநோய் மீது விழிப்புணர்வை உயர்த்துவதற்காக அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் -ஆல் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு தொடர் முயற்சியாகும். தங்களது மார்பக ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாக விவாதிப்பதை சௌகரியமாக பெண்கள் உணர்கின்ற ஒரு சூழலை உருவாக்குவதும் மற்றும் இதன்மூலம் அது குறித்த அச்சத்தையும், அவப்பெயரையும் அகற்றுவதும் இந்த முன்னெடுப்பை தொடங்கியிருப்பதன் நோக்கமாகும்.
ஆரம்ப நிலையிலேயே பாதிப்பு அறிகுறிகளை கண்டறிவதை வலியுறுத்தும் இது, அவர்களது மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா என்று சுயபரிசோதனையின் மூலம் கண்டறியுமாறு அவர்களை ஊக்குவிக்கிறது. #TalkPink போன்ற செயல்திட்டங்களின் மூலம் விழிப்புணர்வை அதிகரிக்கவும் மற்றும் புற்றுநோயை சிகிச்சையின் மூலம் வெல்வதற்கு இலட்சக்கணக்கானவர்களை திறனதிகாரம் பெறச் செய்யவும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது.”ஒருங்கிணைந்து நாம் செயல்படுவோமென்றால், ஒரு ஆக்கப்பூர்வ மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்; ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவது மதிப்புமிக்க உயிர்களை காப்பாற்ற உதவும் என்ற செய்தியை மக்கள் மத்தியில் பரப்புவதை நமது கடமைப் பொறுப்பாக கொண்டு நாம் செயல்படுவது அவசியம்.
புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன.
திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது. இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் மற்றும் ஒரே பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையமாகும்.