அமெரிக்கா மீது வரியைக் குறைத்த இந்தியா? டிரம்ப்பின் பேச்சால் மீண்டும் குழப்பம்!
Ashwin: 'சுப்மன் இல்ல... இவர இந்திய அணிக்கு கேப்டனா போடுங்க...'- அஷ்வின் ஓப்பன் டாக்
ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அல்லது ரவீந்திர ஜடேஜாவை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாகப் பேசியிருக்கும் அஷ்வின், “எல்லோரும் சுப்மன் கில்தான் அடுத்த டெஸ்ட் கேப்டன் என்று கூறுகின்றனர்.
ஆனால் அதைவிட சிறந்த கேப்டனாக பும்ரா உள்ளார். அதே சமயம் ஜடேஜா தான் இப்போது இருக்கும் அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரை கேப்டனாக்குவது பற்றியும் பேச வேண்டும்.
நீங்கள் புதிய கேப்டனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தயார் செய்யப் போகிறீர்கள் என்றால், அதுவரை ஜடேஜாவை கேப்டனாக நியமியுங்கள். ஜடேஜா இரண்டு ஆண்டுகளுக்கு நிச்சயம் கேப்டனாகச் செயல்படுவார்.

புதிய கேப்டனாகத் தேர்வு செய்பவரை, ஜடேஜாவுக்குக் கீழ் துணை கேப்டனாக நியமனம் செய்யுங்கள்" என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs