அந்நிய நிதி வெளியேற்றத்தால் மீண்டும் சரிந்த பங்குச் சந்தைகள்!
Ashwin: `நான் தேவையில்லையெனில் ஓய்வு பெறுகிறேன்'- கறாராகச் சொன்ன அஷ்வின்; எப்போது எடுத்த முடிவு?
இந்திய அணியின் மிக முக்கிய வீரரான அஷ்வின் அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அவர் திடீரென ஓய்வை அறிவித்ததற்கான காரணம் என்னவென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேசியிருக்கிறார்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரோஹித்தோடு வந்திருந்த அஷ்வின் தான் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் தனக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி என்றும் பேசிவிட்டு கிளம்பினார்.
இதன்பிறகு பேசிய ரோஹித் சர்மாவிடம் அஷ்வினின் ஓய்வு முடிவு உங்களுக்கு எப்போது தெரியும். நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டது?
அதற்கு ரோஹித் சர்மா, 'பெர்த்துக்கு நான் வந்தபோதே அஷ்வின் இந்த முடிவை என்னிடம் கூறிவிட்டார். அஷ்வின் எப்போதுமே அணிக்காக யோசிக்கக்கூடியவர். அணி எந்தெந்த வீரர்களை லெவனில் வைத்துக்கொள்ள விரும்புகிறது, அணியின் நலனுக்கு எந்த காம்பினேஷனில் சென்றால் நன்றாக இருக்கும் என எல்லாமே அவருக்குத் தெரியும்.
அதனால் அவராகவே முன்வந்து என்னுடைய பணி இங்கே தேவைப்படவில்லையெனில் நான் ஓய்வை அறிவிக்கப்போகிறேன் எனக்கூறினார். நான்தான் அவரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி பிங்க் பால் டெஸ்ட்டில் ஆட வைத்தேன். அஷ்வின் ஒரு மூத்த வீரர். அவருடன் நீண்ட காலமாக ஆடியிருக்கிறேன். இந்திய அணி கண்டடைந்த ஆகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் அவரும் ஒருவர். அவருடைய முடிவை மதிக்க வேண்டியது எங்களின் கடமை.' என ரோஹித் சர்மா பேசியிருந்தார்.
அஷ்வின் திடீரென ஓய்வு முடிவை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அஷ்வினின் ஓய்வைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.