செய்திகள் :

AUS-W vs IND-W: சொதப்பிய இந்திய மகளிர் அணி... ஆஸியிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா!

post image

அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மகளிர் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலேயே தோல்வியடைந்து தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நேற்று (11-12-2024) களமிறங்கியது. பெர்த் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சுதர்லேண்ட்

தொடர்ந்து அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அருந்ததி ரெட்டி ஆஸ்திரேலியாவின் முதல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார். ஆனாலும், ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சுதர்லேண்ட் நிலைத்து நின்று ஆடி சதம் (110) அடித்து அசத்தினார். மேலும், ஆஷ்லெக் கார்ட்னர் மற்றும் கேப்டன் டஹ்லியா மெக்ராத் ஆகியோர் அனபெல் சுதர்லேண்டுக்கு உறுதுணையாக ஆடி அரைசதம் அடித்து, அணியின் ஸ்கோரை 298-க உயர்த்தினர்.

இந்தியா சார்பில், அருந்ததி ரெட்டி 10 ஓவர்களில் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தபோதும் மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் கைகொடுக்காததால் 299 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணி துரத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. பந்துவீச்சில் தனி ஆளாகப் போராடிய அருந்ததி ரெட்டிக்கு மற்ற பந்துவீச்சாளர்கள் கைகொடுக்காதது போல, பேட்டிங்கில் ஓப்பனிங் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு மற்ற பேட்டர்கள் யாரும் கைகொடுக்கவில்லை.

அருந்ததி ரெட்டி

35-வது ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய ஸ்மிருதி மந்தனா 109 பந்துகளில் 105 ரன்கள் அடித்து அவுட்டனர். இந்த சதத்தின் மூலம் ஒரு ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் (4) அடித்த வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார் ஸ்மிருதி மந்தனா. மறுபக்கம், 45.1 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஒரு கட்டத்தில், மந்தனாவின் விக்கெட்டுக்குப் பிறகு 189-4 என்ற நிலையிலிருந்த இந்திய அணி அடுத்த 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து மோசமாகத் தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஆஷ்லெக் கார்ட்னர் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஆட்ட நாயகி விருது, சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீராங்கனை அனபெல் சுதர்லேண்டுக்கு வழங்கப்பட்டது. இத்தொடரின் தொடர் நாயகன் விருது‌ம் அனபெல் சுதர்லேண்டுக்கே வழங்கப்பட்டது.

போட்டியின் முடிவு குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ``நாங்கள் சிறப்பாகப் பந்து வீசினோம். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக விளையாடினார். இத்தொடரிலிருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டோம். எங்கு தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து தவறுகளைத் திருத்திக் கொள்வோம்." என்றார். இந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி, இந்த ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது,

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

Smriti Mandhana: மகளிர் கிரிக்கெட்டில் உலக சாதனை... அசத்திய ஸ்மிருதி மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கடைசிப் போட்டியில் சதமடித்து புதிய சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.மூன்று ஒருநாள... மேலும் பார்க்க

Jaiswal: ஆஸ்திரேலியாவில் கடுப்பான ரோஹித்... ஜெய்ஸ்வால் இன்றி புறப்பட்ட டீம் பஸ்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மீது கோபம் அடைந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம்இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

Vinod Kambli : சச்சின் - காம்ப்ளி சந்திப்பு தரும் வலியும்; மாபெரும் திறமையாளன் சரிந்த கதையும்

தன்னுடைய பால்ய நண்பனான வினோத் காம்ப்ளியை சச்சின் டெண்டுல்கர் சந்தித்த புகைப்படம்தான் இணையத்தின் சமீபத்திய வைரல்.சச்சினைக் கண்டவுடன் வாஞ்சையோடு எழுந்தரிக்க முயன்று முடியாமல் தடுமாறிய காம்ப்ளியை பார்க்க... மேலும் பார்க்க

CT: `BCCI-க்கு முன் பாகிஸ்தான் இந்த `முடிவு' எடுக்க வேண்டும்' - முன்னாள் கேப்டன் அறிவுரை

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெறவிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் சூழலில், தாங்கள் அங்கு செல்ல மட்டோம் என்பதில் இந்திய அணி உறுதியாக இருப்பத... மேலும் பார்க்க

Joe Root: இன்னும் 493 ரன்களில் பாண்டிங் இடம் காலி; அடுத்து சச்சின் தான்... தனி ரூட்டில் ஜோ ரூட்!

கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி அதிக ரன்களைக் குவித்தவர்கள் பட்டியலில் மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரே முதலிடத்தில் இருக்கிறார். இந்தச் சாதனையை இந்த வீர... மேலும் பார்க்க

Mohammed Siraj Vs Travis Head : களத்தில் ஏற்பட்ட மோதல்; `இருவருக்கும் அபராதம்' - விளக்கமளித்த ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ட்ராவிஸ் ஹெட்டுக்கு அபராதம் விதித்துள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் இருவருக்க... மேலும் பார்க்க