செய்திகள் :

AUSvAFG: அந்த மேக்ஸ்வெல்லை மறக்க முடியுமா? ஆஸியை பழிதீர்க்குமா ஆப்கன்; அரையிறுதி ஸ்பாட் யாருக்கு?

post image

சாம்பியன்ஸ் டிராபி

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில் லீக் சுற்றுகள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. குரூப் A-ல் எந்தவொரு விறுவிறுப்பான ஆட்டமுமின்றி நியூசிலாந்து, இந்தியா, ஆகிய அணிகள் தங்களின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகளை சிரமும் இல்லாமல் வீழ்த்தி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. ஆனால், மறுபக்கம் குரூப் B-ல் இங்கிலாந்து மட்டும் முதல் இரு போட்டிகளில் தோற்று அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்திருக்கிறது.

Champions Trophy 2025
Champions Trophy 2025

மற்ற மூன்று அணிகளான தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்குச் செல்ல போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதில், தென்னாபிரிக்கா அணி அரையிறுதியில் 90 சதவிகிதம் நுழைந்துவிட்டது. இந்த இடத்தில்தான், சாம்பியன்ஸ் டிராபியின் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே கிரிக்கெட் உலகின் பெரிய அணிகளுக்கெல்லாம், `எங்களை வீழ்த்துவது இனியும் சுலபமல்ல' என சவால் அளித்துவரும் ஆப்கானிஸ்தான், கடந்த போட்டியில் கடைசி ஓவர் வரை விரட்டி வந்த இங்கிலாந்து அணியை எந்தப் பதட்டமுமின்றி வீழ்த்தி `We are Fighters' என்று நிரூபித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில், 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்குச் செல்வதற்கு கைமேல் இருந்த வெற்றியை ,மேக்ஸ்வெல் என்ற ஒற்றை ஆளிடம் விட்டதை, இன்று பழிதீர்த்து சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறக் களமிறங்குகிறது ஆப்கானிஸ்தான். அதற்கு முன், 2023 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் வெற்றியை மேக்ஸ்வேல் எப்படி தகர்த்தார் என்பதை ரீவிட் செய்வோம்...

இரு நாடுகளுக்கிடையிலான தொடரில் மாணிக்கம் மாதிரி படுமோசமாக அடிவாங்கினாலும், ஐ.சி.சி தொடர் என்று வந்துவிட்டதால் பாட்ஷாவா மாறிவிடும் ஒட்டுமொத்த ஆஸ்ரேலியா அணியும். அத்தகைய ஆஸ்திரேலிய அணிக்கு ஆன்டனியாக களத்தில் இறங்கியது ஆப்கானிஸ்தான். 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அது 8-வது போட்டி. இரு அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமிருந்தாலும், இந்தப் போட்டியில், வெற்றிபெற்றால் ஒருநாள் உலகக் கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற அரிய வாய்ப்பு ஆப்கானிஸ்தானுக்கு கிடைத்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி எந்த தயக்கமுமின்றி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

அந்தத் தொடர் முழுக்க ஆப்கானிஸ்தான் பயன்படுத்திய உத்திகளில் ஒன்று, `முதல் 10 ஓவரோ, கடைசி 10 ஓவரோ எந்த அவசரமும் படாமல் நிதானமாக ஒவ்வொரு 10 ஓவர்களுக்கும் 50 ரன்கள் அடித்தாலே 250 ரன்கள் கிடைத்துவிடும். அதற்கு மேல் ரன்கள் கிடைத்தால் அது லாபம்தான். எதிரணியை வீழ்த்துவதற்கு மினிமம் கேரன்டியாக 250 ரன்கள் போதும்.' என்பதுதான்.

Ibrahim Zadran
Ibrahim Zadran

இந்தப் போட்டியிலும் அதையே பின்பற்றிய ஆப்கானிஸ்தான் பேட்மேன்ஸ்கள், ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ட்ரியோ பந்துவீச்சு கூட்டணியை நிதானமாக எதிர்த்தனர். நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கெதிரான போட்டியில் தனியாளாக 177 ரன்கள் அடித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் தனது பெயரைப் பதிவுசெய்த ஆப்கானிஸ்தான் ஓப்பனர் இப்ராஹிம் ஸத்ரான், அன்றும் ஓப்பனிங்கில் 50 ஓவர்கள் முழுதாகக் களத்தில் நின்று 129 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலியாவுக்கெதிராக சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

இவருக்குத் துணையாக மற்ற பேட்ஸ்மேன்களின் 20, 30 ரன்கள், கடைசி நேரத்தில் 18 பந்துகளில் 35 ரன்கள் என்ற ரஷீத் கானின் அதிரடி என 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் குவித்தது ஆப்கானிஸ்தான். ஆஸ்திரேலிய பவுலர்களில் ஹேசில்வுட்டைத் தவிர மற்ற அனைத்து பவுலர்களும் எக்கனாமி 5-க்கு மேல் ரன்களை வாரி வழங்கினர். 292 ரன்கள் என்கிற சற்று கடினமான இலக்கை நோக்கி வார்னரும், அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர்.

நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்

ஆப்கானிஸ்தான் பவுலர் நவீன் உல் ஹக், தனது முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்தார். அதோடு நிறுத்தாத நவீன் உல் ஹக் 10 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என அதிரடி காட்டிகொண்டிருந்த மிட்செல் மார்ஷை 6-வது ஓவரில் 24 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பி மேலும் சர்ப்ரைஸ் செய்தார். அவரைத்தொடர்ந்து, நானும் வருகிறேன் என்று விக்கெட் வேட்கையில் இறங்கிய அஸ்மத்துல்லா ஓமர்சாய், அதுவரையில் நிதானமா ஆடிக்கொண்டிருந்த வார்னரை ஒன்பதாவது ஓவரில் விக்கெட் எடுத்து, அடுத்த பந்திலேயே ஜோஷ் இங்கிலிஷையும் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாக்கினார்.

49 ரன்களில் 4 விக்கெட் இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நேரத்தில் மார்னஸ் லபுஷேனுடன் கைகோர்த்தார் மேக்ஸ்வெல். ஆனாலும், 14 ரன்களில் லபுஷேன் ரன் அவுட்டாக, அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸும், மிட்செல் ஸ்டார்க்கும் 10 பந்துகள் கூட களத்தில் நிற்காமல் ரஷீத் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர். 19 ஓவர்களில் 100 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையாக இருந்த மேக்ஸ்வெல்லுக்குத் துணைக்கு வந்தார் அணியின் தலைவன் கம்மின்ஸ்.

Maxwell
Maxwell

ஆனால், ஆட்டம் என்னவோ ஆப்கானிஸ்தானுக்கு சாதமாகச் சென்றது. தொடை தசைப்பிடிப்பு மற்றும் முதுகுவலியால் மேக்ஸ்வெல்லால் கிரீஸை விட்டு நகரக்கூட முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் மேக்ஸ்வெல்லை அனுப்பிவிட்டு ஆடம் ஜாம்பாவை இறக்கலாம் என்ற யோசனைக்கு சென்றது ஆஸ்திரேலிய அணி. ஆனால், தனது அணி களத்தில் தத்தளிக்கும்போது தான் மட்டும் பாதியில் வெளியேறுவதை எந்தவொரு ஒரு ஸ்போர்ட்ஸ்மேனும் விரும்பமாட்டார். மேக்ஸ்வெல்லும் அதைத்தான் செய்தார்.

`சார், ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லனாலும் காளி பொழிச்சிப்பான் சார். கெட்ட பையன் சார்... நீங்க விக்கெட் விடாம பெரிய ஷாட்டுக்கு ட்ரை பண்ணாம ஸ்ட்ரைக் மட்டும் எனக்கு ரொட்டேட் பண்ணுங்க, இந்த ஆட்டத்த நான் முடிச்சு கொடுக்கிறேன்' என கம்மின்ஸுக்கு கண்ணசைத்தார் மேக்ஸ்வெல். மேலும், `இங்க பாருங்க என்னால ஓட முடியாது, ஆனா அது எனக்கு பிரச்னை இல்ல, கைல பேட் இருக்கு அத விட நீங்க எப்டி போட்டாலும் அடிப்பேன் இன்ற மன உறுதி அதிகமா இருக்கு' என ஆப்கானிஸ்தான் பவுலர்களுக்கு மேக்ஸ்வெல் சவால் விட்டார்.

Maxwell
Maxwell

மேக்ஸ்வெல்லுக்கு இருக்றது கையா இல்ல இரும்பா என்று ஆப்கானிஸ்தான் பவுலர்கள் குழம்பிப் போற அளவுக்கு எந்த பந்து போட்டாலும் பவுண்டரியும், சிக்ஸ் மட்டும்தான் போகுது. ஆப்கானிஸ்தானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களின் மொத்த கவனமும் மேக்ஸ்வெல் மீது மட்டும்தான் இருந்தது. கம்மின்ஸை விக்கெட் எடுக்கலாம் என்ற யோசனைக்கே அவர்கள் செல்லவில்லை. 76 பந்துகளில் சதமடித்த மேக்ஸ்வெல், அடுத்த 52 பந்துகளில் இன்னொரு சதமடித்து ஆட்டத்தில் 19 பந்துகளை மிச்சம் வைத்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைப் பரிசளித்தார்.

ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரையில் யாரும் பார்க்காத பேயாட்டம்... இனி யாராவது இப்படி ஆடமுடியுமா என்று வியந்து பார்க்கும் ஆட்டம். ஒற்றைக் காலில் களத்தில் நின்றுகொண்டு மனவலிமையோடு கைகளை மட்டும் சுழற்றி 128 பந்துகளில் 201 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதெல்லாம் யாரும் கற்பனை கூட செய்துபார்க்க முடியாத விஷயம். அதை அன்று சாத்தியமாக்கினார் மேக்ஸ்வெல். அதேசமயம், அதற்கு கொஞ்சமும் கூட குறைவில்லாத ஒரு ஆட்டத்தை ஆடி மேக்ஸ்வெல்லின் துணை நின்றவர் கம்மின்ஸ்.

pat cummins
pat cummins

68 பந்துகளில் 12 ரன்கள் அடித்து விக்கெட் விடாமல் உடன் நிற்பதெல்லாம் இன்று டெஸ்ட் போட்டிகளில் கூட நடக்காத விஷயம். அன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் நெருப்பென்றால் கம்மின்ஸ் எந்தப் பிரஷெரிலும் உருகாத பனிக்கட்டி. நெருப்பும், பனிக்கட்டியும் சேர்ந்த்துதான் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது. இறுதியில், `அசோக்... இந்த நாள் உன்னோட காலண்டர்ல குறிச்சு வச்சிக்கோ' என்று அண்ணாமலை ரஜினி மாதிரி, இந்த ஆட்டத்தை கிரிக்கெட் வரலாற்றில் எழுதி வைத்தார்கள் மேக்ஸ்வெல்லும், கம்மின்ஸும்.

ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்

ஆனாலும், அந்த ஆட்டத்தில் தோல்வி என்பதைத் தாண்டி ஆப்கானிஸ்தான் போராடியதை மறுக்க முடியாது. கடந்த இரு ஐ.சி.சி தொடர்களில் ஆப்கானிஸ்தானைப் போல வேறு எந்த அணியும் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக ஆடவில்லை. அந்தப் போராட்ட குணத்தை இங்கிலாந்துக்கெதிரான கடந்த ஆட்டத்தில் தொடர்ந்து பின்பற்றி பட்தட்டமின்றி வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான், இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. இன்றைய போட்டியின் முடிவில் அரையிறுதிக்குச் செல்வது ஆப்கானிஸ்தானா, ஆஸ்திரேலியாவா என்பதைப்பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்றைய போட்டியின் நினைவுகள் குறித்தும் இன்றைய போட்டி குறித்தும் உங்களின் கருத்துக்களை கமெண்டில் பதிவிடவும்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Dhoni: `தோனியை கேப்டனாக நியமித்தாலும், இந்த அணி..!' - பாக். மகளிர் அணி முன்னாள் கேப்டன்

சொதப்பிய பாகிஸ்தான்பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா என தனித்தனியே அத்தனை பேர் போட்டியை வென்று தரக்கூடியவர்களாகத் தெரிந்தாலும், கடந்த சி... மேலும் பார்க்க

"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்... இந்தப் பெயரைக் கேட்டதும் இக்கால இளைஞர்களுக்கு இவரை வெறும் கிரிக்கெட் வர்ணனையாளராகத்தான் தெரியும். ஆனால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த ஒரு... மேலும் பார்க்க

``இனியும் அவர்களின் வெற்றியை 'அப்செட்' என சொல்லாதீர்கள்!" - ஆப்கானிஸ்தான் அணியைப் பாராட்டும் சச்சின்

ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்... மேலும் பார்க்க

Dhoni: `One Last Time' - தோனிக்கு இதுதான் கடைசி சீசன்? சென்னை வந்த தோனியின் டி-ஷர்ட்டில் Morse Code

இந்தியன் பிரீமியர் லீக்கின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்... மேலும் பார்க்க

IPL 2025: நெருங்கும் ஐபிஎல்; சென்னை வந்த CSK வீரர்கள் - போட்டிகள் முழு விவரம் இங்கே!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2024 இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு... மேலும் பார்க்க

கடைசி பந்தில் ரன்னில் அவுட்... தோனியை கண்முன் கொண்டுவந்த RCBW; WPL வரலாற்றில் முதல் சூப்பர் ஓவர்

மகளிர் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக அரங்கேறிய சூப்பர் ஓவரில், ஆர்.சி.பி அணியை உத்தரப்பிரதேச வாரியர்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றிருக்கிறது.நடப்பு WPL-ன் ஒன்பதாவது போட்டியில் ப... மேலும் பார்க்க