செய்திகள் :

Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்..." - மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு!

post image

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பேபி & பேபி. அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யோகிபாபு, ``இந்தப் படத்தின் இயக்குநர் பிரதாப் என்னுடைய நண்பர்தான். நாங்க ஏற்கெனவே 18 வருசத்துக்கு முன்னாடி ஒன்னா ஒரு படத்துல காட்டுவாசி வேசத்துல நடிச்சிருக்கோம். ஒரே ரூம்லதான் அப்போ இருந்தோம்.

நடிகர் யோகிபாபு
நடிகர் யோகிபாபு

நான் ஏதோ சின்ன காமெடி நடிகனாகிட்டேன். அவர் இப்போ இயக்குநராகிட்டார். லட்சியம்தான் வாழ்க்கையில நம்மளை ஜெயிக்க வைக்கும். அதுக்கு உதாரணமா இருக்குற பிரதாப்புக்கு வாழ்த்துகள். இமான் சாரை ரொம்ப பிடிக்கும். சூட்டிங் ஸ்பாட்ல சத்யராஜ் சார்கிட்ட கவுண்டமனி சார் பத்தி நிறைய பேசுவோம். ஒருமுறை கவுண்டமணி சார்கிட்ட சத்யராஜ் சார் பத்தி பேசும்போது, அவர் சொன்னார், `சத்யராஜ் இன்னும் நடிச்சிட்டே இருக்காரேப்பா...'னு சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு செம சிரிப்பு...

ஜெய்சார்கிட்ட எப்படி சார் எப்போவும் யூத்தாவே இருக்கீங்கனு கேட்டேன். அதுக்கு அவர், சிங்களா இருக்குறதாலதான் இன்னும் அப்படியே இருக்கேனு சொல்றாரு. சீக்கிரம் கமிட் ஆகிருங்க சார்... இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. மக்களுக்குப் புடிக்கும். உங்களோட ஆதரவு எப்போவும் எங்களுக்கு வேணும்" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நடிகர் ஜெய், ``டைரக்டர் இந்தக் கதையைச் சொன்ன உடனே ஓகே சொல்றதுக்கு மூன்று பேர்தான் முக்கிய காரணம். சத்யராஜ் சார், இமான் சார், யோகிபாபு சார். இவங்க கதையைக் கேட்டு, ஃபிள்டர் பண்ணிருப்பாங்கனு தெரிஞ்சிதான் உடனே ஒகே சொன்னேன். ஷூட்டிங் நோன்பு டைம்லதான் நடந்துச்சு. ஆனா அது எனக்குச் சிரமமா இல்லை.

நடிகர் ஜெய்
நடிகர் ஜெய்

சுத்தி இருக்குறவங்க காமெடி பண்ணி சிரிச்சி வயிறு வலிக்கும்ல, அந்த வலிதான் எனக்கு ரொம்ப வந்துச்சு. நமக்கு ஏத்த மாதிரி டைலாக் மாத்திக்கலாம்னு கேட்டா டைரக்டர் ஒகேலாம் சொல்லுவார். ஆனா அவர் எடுக்குற மூணாவது டேக்ல, அவர் என்ன கேட்டாரோ அந்த டைலாக்தான் இருக்கும். அப்படியான திறமையான டைரக்டர். இந்தப் படத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்க்கு போனா ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நடிகர் இருப்பாங்க. நாம ஒரே படம்தான் நடிக்கிறோமானு நினைக்கிற அளவுக்கு நடிகர்கள் இதுல இருந்தாங்க. அந்த கேரக்டருக்கு அவங்கதான் பண்ணனும்னு சூப்பரா செலக்ட் பண்ணிருந்தாங்க. தியேட்டருக்கு படம் பார்க்கப் போனா எந்த பாரத்தையும் ஏத்திட்டு வராம, அதை இறக்கி வச்சிட்டு வர மாதிரியான படமா இது இருக்கும்" என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை... மேலும் பார்க்க

Baby & Baby: "'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு; ஆனா..." - டி.இமான் பளீச்

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பேபி & பேபி. பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு ... மேலும் பார்க்க

Baby & Baby: ``அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சவங்கதான் எனக்கும் ஜோடி..." -நடிகர் சத்யராஜ்!

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ர... மேலும் பார்க்க

Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்க... மேலும் பார்க்க

STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல' - 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு - அடுத்தடுத்த அப்டேட்ஸ்

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு `பத்து தல' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தத... மேலும் பார்க்க

Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது...' - தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; பின்னணி என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர்... மேலும் பார்க்க