செய்திகள் :

``BAD GIRL-தான் எனது தயாரிப்பின் கடைசி படம்; தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடுகிறோம்'' - வெற்றிமாறன்

post image

இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'BAD GIRL'.

அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.

`BAD GIRL' படம்
`BAD GIRL' படம்

இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், "ஒரு இயக்குநராக இருப்பது சுதந்திரமாக இருக்கும். ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைத் தரும்.

இயக்குநர் வர்ஷா முதல் 45 நிமிட கதையை என்னிடம் சொன்னார். அப்போது எனக்கு என்ன தோன்றியது என்றால் நாம் நிறையப் படங்களைப் பார்த்திருக்கிறோம்.

'அழியாத கோலங்கள்', 'துள்ளுவதோ இளமை' போன்று வெவ்வேறு காலக்கட்டங்களில், வெவ்வேறு சூழல்களில் பதின்பருவப் படங்களைப் பார்த்திருப்போம்.

அந்தப் படங்கள் அனைத்தும் ஒரு ஆண் வளர்ந்து வரும்போது பதின் பருவத்தில் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களை அவன் எப்படி கையாளுகிறான். அதனை எப்படி எதிர்கொள்கிறான். சமூகத்தோடு எப்படி பொறுத்திக்கொள்கிறான் என்பது பற்றி மட்டும்தான் இருந்தது.

ஆனால் இந்தக் கதையில் ஒரு பெண் பதின்பருவத்தில் எந்த மாதிரியான விஷயங்களை எதிர்கொள்கிறாள் என்று இருந்தது. குறிப்பாக காமெடியான முறையில் விஷயங்களை அவர் எடுத்துச்சொன்னார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

அதனால் இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடித்தே அனைவருமே வர்ஷா தேர்ந்தெடுத்தவர்கள்தான். அவருடைய 100 சதவிகிதத்தையும் இந்தப் படத்திற்காகக் கொடுத்திருக்கிறார்.

'Bad Girl' படத்தில் அனைவருக்குமே நன்றி. இந்தத் தலைமுறை போன தலைமுறையையும், போனத் தலைமுறை இந்தத் தலைமுறையையும் ஜட்ஜ் பண்ணுவது தவறான ஒரு விஷயம் என்று நான் சொல்வேன்.

ஒவ்வொரு தலைமுறையினருக்கான வாழ்க்கை அவர்களுக்கானது. மற்றவர்கள் ஜட்ஜ் பண்ணுவது சரியாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் அம்மா - மகள் இருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் இருக்கும் இடைவெளியை இருவரும் கடந்தார்களா? இல்லை கடக்க முயற்சி செய்தார்களா? என்பதுதான் இந்தப் படம்.

முதலில் இந்தப் படத்தை எங்களுடன் இனணந்து அனுராக் காஷ்யப்பும் தான் தயாரிக்க இருந்தார். ஆனால் ஒரு சிலக் காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.

`BAD GIRL' படம்
`BAD GIRL' படம்

பிறகு படத்தின் முதல் பாகத்தை அவரிடம் காட்டினேன். அவர்தான் இசையமைப்பாளர் அமித்தை இந்தப் படத்திற்கு அறிமுகப்படுத்தினார். இந்த நேரத்தில் அனுராக்கிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்ன மாதிரி இருக்கிறவர்களுக்கு படத் தயாரிப்பு என்பது மிகவும் சேலன்ஜ் ஆன ஒரு விஷயமாக இருக்கிறது. சில இடங்களில் கடன் வாங்கி படம் எடுக்கிறோம். இது மிகப்பெரிய சேலன்ஜ் ஆக இருக்கிறது. இதற்கு முன் நான் தயாரித்த மனுஷி படம் கோர்ட்டுக்கு போயிருக்கிறது. இந்தப் படத்திற்கும் நிறைய சவால்கள் இருந்தன.அதனால் 'BAD GIRL' படம்தான் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனியின் கடைசி படமாக இருக்கும். அதன்பிறகு கடையை இழுத்து மூடுகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

தெருநாய்கள் விவகாரம்: "மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால்" - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம், 'சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் ... மேலும் பார்க்க

Shraddha Srinath: 'ஓ நெஞ்சாத்தியே நெஞ்சாத்தியே' - ஷரத்தா ஶ்ரீநாத்தின் கிளிக்ஸ் | Photo Album

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்... மேலும் பார்க்க

Shriya Saran: நடிகை ஸ்ரேயாவின் Cute கிளிக்ஸ் | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் இணையும் புதிய படம்: பூஜை க்ளிக்ஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. கோர்ட் ரூம் டிராமாவாக உருவாகும் இந்த படம் பெண்-மைய கதையாக உருவாகிறது என்றும், இதில்... மேலும் பார்க்க

Madharaasi: "என் முகத்தை எடிட் செய்து நான் ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதாக..." - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'மதராஸி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. ஏ. ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ருக்மினி வசந்த், ப... மேலும் பார்க்க

Idly Kadai: 'இன்பன் உதயநிதி' - சினிமாவில் விநியோகஸ்தராக களமிறங்கும் இன்பநிதி!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்... மேலும் பார்க்க