அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய திட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு!
Bank Job: பரோடா வங்கியில் Specialist Officer பணிகள்... காலியிடங்கள் - 592; முழு விவரங்கள்..!
Bank Of Baroda: பரோடா வங்கியில் Specialist Officer பதவிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்த விவரங்கள்:
பணியின் பெயர்: Specialist Officers
காலியிடங்கள்: 592
துறைவாரியாக காலியிட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
வயது வரம்பு:
22 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST/ OBC / PWD அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் சலுகை உண்டு.
பணி அனுபவத்திற்கேற்பவும் வயது வரம்பில் சலுகை உண்டு.
01-10-2024 தேதியின்படி வயது கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பொது / EWS / OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.600.
SC/ST/ PWD / பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100.
கல்வித்தகுதி
Computer Science / IT / Electronics / Electrical / Communication போன்ற ஏதாவது ஒரு பொறியியல் பாடப்பிரிவில் B.E. / B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது MBA Finance / MCA/PGDM Marketing / MBA Marketing அல்லது CA/CMA/CFA போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் குறைந்தது 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
பணி அனுபவம் மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள். நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வில் தகுதியின் அடிபடையில்
பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இது பற்றிய விவரங்கள் மின்னஞ்சல் மூலம்அனுப்புவார்கள்..
விண்ணப்பிக்கும் முறை
www.bankofbaroda.in/career.htm தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசிநாள்: 19-11-2024
மேலும் முழு விவரங்களுக்கு Advt. No.: BOB/HRM/REC/ADVT/2024/06 இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.