இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
Bazooka:``அதோடு நானும், நீங்களும், நாமும்...''- மம்மூட்டி நம்பிக்கை
மம்மூட்டி நடித்திருக்கும் `பசூகா' திரைப்படம் நாளைய தினம் வெளியாகிறது. மம்மூட்டியின் இந்தத் திரைப்படத்தையும் அறிமுக இயக்குநர் டீனோ டெனிஸ் இயக்கியிருக்கிறார். மலையாள சினிமாவுக்கு பல இயக்குநர்களை மம்மூட்டி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
அவர் அறிமுகப்படுத்திய மலையாள இயக்குநர்கள் பலரும் தற்போது மாலிவுட்டில் ஜொலித்து வருகிறார்கள். டீனோ டெனிஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த `பசூகா' திரைப்படத்தில் கெளதம் வாசுதேவ் மேனனும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவின் பிரபல கதாசிரியரான கலூரி டெனிஸின் மகன்தான் இந்த டீனோ டெனிஸ். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2023-ம் ஆண்டே தொடங்க வேண்டியது.
மம்மூட்டி தாயாரின் மறைவினால் இத்திரைப்படம் தொடங்குவதற்கு அப்போது தாமதமானது. நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.
இத்திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் மம்மூட்டி, ``மீண்டும் ஒரு புதிய இயக்குநருடன் நான் வருகிறேன். டினோ டென்னிஸ் என்ற புதிய இயக்குநர் அவரே கதையும், திரைக்கதையும் எழுதியுள்ளார்.
நாளை 'பசூகா' திரையரங்குகளில் வெளியாகிறது. கேமிங்கை மையப்படுத்திய இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.
முதல் முறையாகக் கேட்டபோதே எனக்குப் பிடித்துவிட்டது. அது இப்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்போது, அதை நீங்கள் விரும்பி ரசிக்க வேண்டியதுதான்.
எப்போதும் சொல்வதுபோல, ஒவ்வொரு புதிய இயக்குநரும் ஏதோ புதிய விஷயத்தை சொல்ல வருகிறார்கள். அதோடு நானும், நீங்களும், நாமும்." எனப் பதிவிட்டிருக்கிறார்.