தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?
BB Tamil 8: `நான் பண்ணது தப்புதான்...' - கண் கலங்கிய பவித்ரா - என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 73-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி வருகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் உதவியுடன் போட்டியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கற்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இந்த வாரத்திற்கான டாஸ்க். அதில் ஜெஃப்ரியும் பவித்ராவும் இணைந்து தங்களுக்கான கற்களைக் காப்பாற்றும்போது ராணவ் அதைத்தடுத்தார். அப்போது ராணவை ஜெஃப்ரி தள்ளிவிட அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.
தொடர்ந்து இந்த டாஸ்க்கில் மோதல்கள் ஏற்பட்டுவருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரோமோவில், பவித்ரா, ஜாக்குலின், மஞ்சரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பவித்ரா ஜாக்குலினை கடிக்குறா என்று மஞ்சரி கத்துகிறார். நான் கடிக்கலனு பவித்ரா சொல்ல ஜாக்குலின் கடுப்பாகி நீ பண்ணது தப்பு பவி என்றார். நீ பண்ணதும் தப்பு தான் ஜாக்குலின் என்றார் பவித்ரா. நீ பண்றது சரி கிடையாது என்று மஞ்சரி சொல்லும்போது நான் பண்ணது தப்புதான். ஆனா என்னால முடியல" என்று கூறி பவித்ரா அழுகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...