BB Tamil 8: ரொம்ப ஓவரா பண்றீங்க, நீங்க பண்றத நான் இங்க சொல்லட்டா? - தீபக்கை சாடிய வர்ஷினி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96-வது நாளுக்கான (ஜனவரி 10) இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் வர்ஷினிக்கும், தீபக்கிற்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. நான் அப்படி என்ன தப்பு பண்ணினேன். ரொம்ப ஓவரா பண்றீங்க. உங்களுக்கு மட்டும்தான் விளையாடத் தெரியும்னு நினைச்சிட்டு இருக்கீங்களா?
நீங்க சேஃப் (safe) கேம் விளையாடுறத நான் இங்க சொல்லட்டா? தீபக் இங்க சேஃப் கேம் விளையாடுறாரு தயவு செய்து புரிஞ்சுக்கோங்க' என்று அழுதபடி கோபப்படுகிறார். 'அவுங்க இதை ஒரு கம்ளைன் மாதிரி கொண்டு வந்து தப்பா ப்ரொஜெக்ட் பண்றாங்க' என்று தீபக் சொல்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இன்றைய எபிஷோடில் பார்ப்போம்.