Ashwin : 'இந்தி தேசிய மொழி அல்ல; அலுவல் மொழிதான்' - மாணவர்கள் மத்தியில் அஷ்வின் ...
BB Tamil 8: `விதியை மீறிட்டீங்க வெளிய வந்திருங்க'- பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; காரணம் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான முதல் போட்டியாளராக ரயான் தேர்வாகி இருக்கிறார். இந்த சீசனின் கடைசி போட்டியாளராக வந்து, இப்போது முதல் பைனலிஸ்ட்டாக இவர் மாறியிருக்கிறார்.
இதனிடையே சுனிதா, வர்ஷினி, அர்ணவ், ரவீந்தர், சிவகுமார், சாச்சனா, தர்ஷா குப்தா, ரியா என எட்டு பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கின்றனர். அவர்களால் உள்ளே உள்ள 8 போட்டியாளர்களில் இருவர் ஸ்வாப் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் பணப்பெட்டி குறித்து ரியா மற்றும் அர்ணவிடம் பேசினார் ரவீந்தர். நாம் முடிவு செய்யும் நபரை பணப்பெட்டியை எடுக்க வைக்க வேண்டும் என ரியா தியாகராஜனிடம் தெரிவித்தார் ரவீந்தர். டிடிஃஎப் ஜெயிச்சுட்டு, பெட்டியை எடுத்துப் போனேன் என்பதையும் தாண்டி நான் ஃபைனலிஸ்ட்டா இருந்தேன் என ரயான் பேச, நீங்க பெட்டியை எடுத்துட்டு போனாலும் ஃபைனலிஸ்ட் தாங்க பெட்டியை எடுத்துட்டுப் போறீங்க என்றார் ரவீந்தர்.
இதையடுத்து இந்த வீட்டுக்கென்று சில ப்ரோட்டோகால்ஸ் இருக்கு. அதையும் மீறி ஓட்டிங் பற்றி பேசியிருக்கீங்க. மக்கள் கருத்தை பற்றி பேசியிருக்கீங்க என்று கன்ஃபஷன் அறைக்கு வரச் சொல்லி அவர் விதிமீறல் செய்ததாக தெரிவித்தார் பிக் பாஸ். மேலும் கமான் ரவீந்தர் என்றார். அதை கேட்ட ரவீந்தரோ அழுது சாரி பிக் பாஸ் என்று மன்னிப்பு கேட்கிறார்.