சம்பளத்தில் பாலின பாகுபாடு: `மார்கெட் வேல்யூ என்னவோ அதைக் கேளுங்கள்' - பிரியாமணி
BB Tamil 9: 'அவர் செய்யும் ஆக்டிவிட்டி எல்லாம் தவறா இருக்கு'- வினோத் திவாகர் வாக்குவாதம்
அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்திருக்கிறது.
மொத்தம் 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இதில் மூன்றே நாட்களில் தாமாகவே முன்வந்து நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தியும் கடந்த வாரம் அப்சரவாவும் வெளியேறினர்.

இந்த வார ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்கால் வீடே கலவரமாகி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.24) முதல் புரொமோ வெளியாகி இருக்கிறது.
சிறப்பாகப் பங்கெடுத்துக் கொள்ளாத இரண்டு நபர்களைச் சொல்லுங்கள் என்று பிக் பாஸ் சொல்ல, 'இந்த வாரம் முழுசும் அவங்க பிரச்னை மட்டும்தான் பண்ணாங்க' என கனி விஜே பார்வதியைச் சொல்கிறார்.
பிறகு 'அவர் செய்யும் ஆக்டிவிட்டி எல்லாம் தவறா இருக்கு' என திவாகர் வினோத்தைச் சொல்கிறார். 'ரொம்ப வைலன்ட்டா இருக்காரு' என வியன்னா கம்ருதீனைச் சொன்னார்.

'ஒரு கன்சர்ன்காக நான் பார்வதியை சொல்றேன்னு' கம்ருதீன் சொல்ல திவாகர் பார்வதிக்காக சப்போர்ட் செய்கிறார். இதனைத்தொடர்ந்து வினோத்துக்கும், திவாகருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.



















