செய்திகள் :

Beauty: இனிக்கும் தேனில் இத்தனை அழகுக் குறிப்புகளா?

post image

தேன் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நல்லதோ, அதேபோல நம் சருமத்துக்கும் நல்லது. இதோ கலப்படமில்லாத தேனின் சில அழகு பலன்கள்..!

தேனின் சில அழகுக்குறிப்புகள்.
தேனின் சில அழகுக்குறிப்புகள்.

முகப்பரு:

முகப்பரு வந்த இடத்தில் தினமும் தேன் தடவி , 10 நிமிடம் ஊறவைத்து, முகத்தைக் கழுவி வந்தால், அதிலிருக்கும் பாக்டீரியாவை அழித்து, முகப்பருக்கள் பரவாமல் பார்த்துக்கொள்ளும்.

வடுக்கள்:

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் புதிய தழும்புகளின் மீது தேன் தடவும்போது, அதிலிருக்கும் கறைகளைத் தேன் எளிதில் நீக்கும்.

ஈரப்பதம்:

தேனை முகத்தில் தடவி ஊறவைத்து ஃபேஷியல் செய்யும்போது, முகத்தின் வறட்சியை நீக்கி, பளபளப்பான ஈரப்பதமுள்ள தோற்றத்தை உண்டாக்கும்.

மூப்படையாமல் இருக்க:

இளமையான தோற்றத்துக்கு, தினமும் ஒரு டீஸ்பூன் தேனை உணவாக எடுத்துக்கொள்ளுதல் நல்லது. தினமும் முகத்தில் பரவலாகத் தேன் பூசி ஊறவைத்து, முகம் கழுவிவந்தால், தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தேனின் சில அழகுக்குறிப்புகள்
தேனின் சில அழகுக்குறிப்புகள்

உதடு:

சர்க்கரையும் தேன்துளிகளும் கலந்த எலுமிச்சைச் சாற்றை உதட்டில் தடவி, 5 நிமிடங்கள் ஊறவைத்தால், வறண்ட உதட்டுப் பகுதி மென்மை அடையும்.

நக கண்டிஷனர்:

தலா ஒரு டீஸ்பூன் தேன், வினிகர் எடுத்து கலந்து, நகம் மற்றும் நக இடுக்குகளிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவிவந்தால், நகங்கள் வலிமையும் மென்மையும் பெறும்.

ஷேவிங்:

ஷேவிங் செய்த பின்பு, முகத்தில் தோன்றும் புடைப்புகள் மற்றும் கொப்புளங்களிலிருந்து தப்பிக்க, தேன் தடவலாம். அவை எளிதில் சரியாகும்.

தேனின் சில அழகுக்குறிப்புகள்
தேனின் சில அழகுக்குறிப்புகள்

கருவளையம்:

கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையத்தைச் சரிசெய்ய, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு டீஸ்பூன் தேனைக் கண்களைச்சுற்றி தடவி, 20 நிமிடம் ஊறவைத்துக் கழுவினால் போதும்.

படை:

உடலில் தோன்றும் படையையும் , நாள்பட்ட தோல் ஒவ்வாமையையும் சரிசெய்ய, பாதிக்கப்பட்ட இடத்தில் தேனைத் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர, சில நாட்களில் சரியாகிவிடும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப்ஸ்!

இளமையை பிடித்து வைத்துக்கொள்ள எல்லாருக்குமே பிடிக்கும். இளமை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைப் பளிச்செனச் சொல்லி விடுபவைக் கூந்தல், முகம் மற்றும் பாதங்கள்.இவற்றை இளமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!... மேலும் பார்க்க

Beauty: ``5 ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய அழகுக்குறிப்பு!'' - ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

அழகு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது முகம் மட்டுமே. அந்த முகத்தை அழகாகவும் பொலிவுடனும் காண்பிப்பதற்கு ஏராளமான கிரீம்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் கொண்டு ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம்.. முதுமை தோற்றத்தை தள்ளிப்போட எது பெஸ்ட்?

Doctor Vikatan: தினமும் இரவில் முகத்துக்குக்ரீம் தடவ வேண்டுமா... அந்த க்ரீமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்.... நைட் க்ரீம், ஆன்டிஏஜிங் க்ரீம், சீரம் இந்த மூன்றும் ஒன்றா... எதை, எப்படிப் பயன்படுத்த வ... மேலும் பார்க்க

Health: டீ, காபி குடிப்பதுதான் இளநரைக்குக் காரணமா?

இன்றைய பரப்பரப்பான‌ உலகிலும் தலைமுடி என்றாலே இளசுகளுக்கு கொஞ்சம் அக்கறை அதிகம்தான். அக்கறை அதிகம் காட்டுவதாலோ என்னவோ முடிகொட்டுதல், இளநரை அப்படி இப்படின்னு ஆயிரம் பிரச்னை அந்த ஒற்றை தலைக்கு மேல் தாளம்... மேலும் பார்க்க