செய்திகள் :

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

post image

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வகையில் பெங்களூரு சர்ச் சாலை, கோரமங்களா பகுதியில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்து 'Videos Of Bengaluru Women' என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவ, வீடியோவில் இருக்கும் பெண்கள் குறித்த ஆபாசமான கமெண்ட்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

சர்ச்சையான வீடியோ

இதைக் கண்ட அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஒருவர், "சும்மா தெருக்களை வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பின்தொடர்ந்து, ரகசியமாக வக்கிரமான எண்ணத்துடன் வீடியோ எடுத்தார் இந்த நபர். அனுமதியின்றி இப்படி பெண்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். காவல்துறை இந்த நபரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட பெங்களூரு காவல்துறை இதுபோன்ற வீடியோக்களைப் பதிவிட்ட 26 வயதாக குர்தீப் சிங் என்பவரைக் கண்டறிந்து கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் பெங்களூருவின் கே.ஆர் புரம் பகுதியில் வசிப்பதாகவும், சகோதரருடன் வசித்து வரும் அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சர்ச்சையான வீடியோ

இன்ஸ்டாகிராம் மெட்டா நிறுவனத்தில் இதுதொடர்பான வீடியோக்களையும், சர்ச்சைக்குரிய அக்கவுண்டுகளையும் நீக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், இதுபோன்று சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களைப் பதிவிடும் நபர்களை பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியிருக்கிறது பெங்களூரு காவல்துறை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாகநீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ... மேலும் பார்க்க

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகி... மேலும் பார்க்க

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக ந... மேலும் பார்க்க