செய்திகள் :

Bigg Boss Tamil 8: பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளர்கள்; யார் யார் தெரியுமா?

post image
பிக்பாஸ் தமிழ் 8 இறுதிக்கட்டத்தை நெருங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் சில வாரங்களுக்குப் பின் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் சேர்ந்தனர்.

அடுத்தடுத்த எவிக்‌ஷன் மூலம் ரஞ்சித், ரவீந்தர், சாச்சனா, சுனிதா, வர்ஷினி வெங்கட், ராணவ் உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறினர்.

விஷால், ரயான், முத்துக்குமரன், அருண், சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, தீபக் ஆகிய 8 பேர் இப்போது நிகழ்ச்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இறுதி நேரம் என்பதால் போட்டியாளர்களூக்கு ஆதரவாக வெளியிலும் பலரும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

ரவீந்தர்

இந்நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சில முன்னாள் போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்கு அழைத்திருக்கிறார்களாம்.

அர்னவ்

ரவீந்தர், அர்னவ், சுனிதா, வர்ஷினி வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் இன்று சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்களுடன் ஓரிரு நாளில் மேலும் சிலர் கூட செல்ல வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்போது பிக் பாஸ் வீடு செல்லும் இவர்கள் நிகழ்ச்சி முடியும் வரை அங்குதான் இருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

BB Tamil 8 : 'முத்து என் தம்பி, சாச்சனா பண்ணறது சரியில்ல' - காட்டமான ஜாக்குலின்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக... மேலும் பார்க்க

BB Tamil 8: `விதியை மீறிட்டீங்க வெளிய வந்திருங்க'- பிக் பாஸின் அதிரடி அறிவிப்பு; காரணம் என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 93: `மிட் வீக் எவிக்சன்' அராஜகம் செய்த அர்னவ் - போட்டியாளர்களுக்கு நேர்ந்த சங்கடம்

இந்த எபிசோட், ‘பழிக்குப் பழி, புளிக்குப் புளி’ மோடில் இருந்தது. வெளியில் இருந்து வந்தவர்கள், பழைய காயங்களை மீண்டும் கிளறி ரத்தத்தின் ருசியைப் பார்த்தார்கள்.இதை கரிசனத்தோடும் மிருதுவாகவும் செய்தவர்கள் ... மேலும் பார்க்க

Siragadikka Aasai: புதிய காதல் கதை; ரோகிணி பஞ்சாயத்து - நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

சிறகடிக்க ஆசை சீரியலின் நேற்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ரோகிணியும், மனோஜும் பணத்தைப் பற்றி விவாதிக்கின்றனர். எப்படி பணத்தைப் புரட்டுவது, எப்படி ஏமாற்றிய நபரைக் கண்டுப்பிடிப்பது என பேசிக் கொண்டிருக்கிறார... மேலும் பார்க்க

BB Tamil 8: சூர்யாவாக அருண்; த்ரிஷாவாக சௌந்தர்யா - பிக் பாஸ் வீட்டில் `ஆடிய ஆட்டம் என்ன?’

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 94-வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்கான... மேலும் பார்க்க

BB Tamil 8: ``அறம் அறம்னு அறுக்குறியே தவிர நீ செய்ற எதுலயும் அறம் இல்ல"- முத்துவை சாடிய சிவகுமார்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 93வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்டிக்... மேலும் பார்க்க