செய்திகள் :

Bihar: ஒரே நாளில் நின்றுபோன ரூ.40 லட்சம் கடிகாரம்; ஸ்மார்ட் சிட்டி திட்டம் மீதெழுந்த விமர்சனம்!

post image

பீகார் மாநிலத்தில் திறக்கப்பட்ட ஒரே நாளில் ஓடாமல் நின்ற கடிகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் முக்கிய நகரம் பிகார் செரீப். இந்த நகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி செலவில் இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிகாரம் முதலமைச்சரின் பிரகதி யாத்திரை சமயத்தில் அவசர அவசரமாக கட்டப்பட்டது என டைனிக் பாஸ்கர் தளம் தெரிவிக்கிறது.

ஆனால் திறக்கப்பட்ட மறுநாளே திருடர்கள் கடிகாரத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bihar கடிகார கோபுரத்தைத் திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

திறக்கப்பட்ட ஒரே நாளில் நின்றதனால் மட்டுமல்ல, அந்த கடிகாரத்தின் தோற்றத்துக்காகவும் சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டு வருகின்றது.

அந்த கடிகார கோபுரம் மிகவும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. தரமற்ற வர்ணப்பூச்சும், அரைகுறையாக முடிக்கப்பட்ட வேலைகளும் இணையவாசிகளால் தூற்றப்பட்டு வருகிறது.

"இந்த கடிகாரத்தில் அழகியலும் இல்லை, நவீனத் தன்மையும் இல்லை, அனைவரும் இதைத் திட்டித்தீர்க்கும்போது சிலர் நமக்கு ஏதோ கிடைக்கிறதே என மகிழவும் செய்கின்றனர்" என ஒரு சமூக வலைத்தள பயனர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிகார கோபுரத்தை மற்ற கடிகார கோபுரங்களுடன் ஒப்பிட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

”திருமணமானதும் குழந்தை பிறக்காது” - பொன்முடியைத் தொடர்ந்து திமுக எம்பி கல்யாணசுந்தரம் சர்ச்சை பேச்சு

கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லத்திற்கான வேலை தொடங்குவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், ராஜ்ய... மேலும் பார்க்க

`தப்பியதா... தள்ளிப்போனதா?’ ஊசலாட்டத்தில் பொன்முடியின் இலாகா!

வைணவ, சைவ சமயங்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்தச் சூழலில், அவரின் இலாகாவை மாற்றுவதற்கு ஆட்சி மேலிடம் ஆலோசித்த... மேலும் பார்க்க