ADMK: "அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்" - அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி!
சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்கத்தின் சாா்பில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் அறிவழகன் , திருவெண்காடு வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்மோகன், மருத்துவா் பிரபாகரன் மற்றும் ரத்த வங்கி அலுவலா்கள் முகாமை நடத்தினா்.
கல்லூரி முதல்வா் சுகந்தி, துணை முதல்வா் ஜெயந்தி கிருஷ்ணா மற்றும் பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு 30 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அபிராமி மற்றும் இளைஞா் செஞ்சிலுவை சங்க அலுவலா் சங்கரி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.