செய்திகள் :

Canada: இந்தியா - கனடா தூதர்கள் நியமனம்; மீண்டும் துளிர்க்கும் உறவு!

post image

2023-ம் ஆண்டு, கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆர்வலர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.

விரிசல் விழுந்த உறவு

இந்தக் கொலைக்கும் இந்திய அரசுக்கும் சம்பந்தம் உள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்த நீண்டகால நட்பில் விரிசல் விழுந்தது. ஒருகட்டத்தில், இரு நாடுகளுக்கும் இந்த விஷயத்தில் கடுமையான வார்த்தைப்போர்கள் ஏற்பட்டன.

இதன்விளைவாக, 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம், இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களை நீக்கினலும், தங்களது தூதர்களைத் திரும்ப பெற்றன.

மோடி, ஜஸ்டின் ட்ரூடோ
மோடி, ஜஸ்டின் ட்ரூடோ

பிரதமர் ஆன மார்க் கார்னே

இன்னொரு பக்கம், கனடா நாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்கு எதிரான குரல்கள் எழுந்தன. இதனால், ஜஸ்டின் ட்ரூடோ இந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.

இதனையொட்டி, கடந்த மார்ச் மாதம் நடந்த கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் மார்க் கார்னே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா - கனடா உறவு

அதன் பின், அவர் இந்தியா-கனடா உறவை மீண்டும் வலுப்படுத்த கவனமாக செயலாற்றி வருகிறார். 2023-ம் ஆண்டு முதல் இருநாடுகளுக்கு இடையே விட்டுப்போன வர்த்தக பேச்சுவார்த்தைகள் இப்போது மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

நிஜ்ஜார் கொலை வழக்கை மிக கவனமாக கையாண்டு வருகிறார் கார்னே.

கடந்த ஜூன் மாதம் நடந்த பிரதமர் மோடி-கார்னே சந்திப்பு நல்லபடியாக முடிந்தது.

கிறிஸ்டோபர் கூட்டர்
கிறிஸ்டோபர் கூட்டர்

யார் யார் தூதர்கள்?

இந்த நிலையில், மீண்டும் இரு நாடுகளும் நேற்று தங்களது தூதர்களை அறிவித்துள்ளன.

தற்போது, இந்தியாவின் கனடா தூதராக கிறிஸ்டோபர் கூட்டர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத் துறை பணிகளில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இவர் இந்தியா, கென்யா, நமீபியா, துருக்கி, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கெனவே பணியாற்றி உள்ளார்.

இந்திய அரசு சார்பில் விரைவில் தினேஷ் கே. பட்நாய்க் கனடாவின் இந்திய தூதராக பொறுப்பேற்பார் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் அதிக அளவில் இந்தியர்கள் குடியேறி உள்ளனர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு, பூமியில் வேரெடுத்து விட்டது போல் இரு நாட்டு உறவுகள் இன்னும் செழிக்கட்டும்.

சிவகங்கை: ஆற்றில் மிதந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள்; கலெக்டர் சொல்வது என்ன?

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆற்றில் கொட்டப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அரசுத்துறை சார்ந்த மக்களின் தீர்க்கப்படாத அனைத்து பிரச்னைகளு... மேலும் பார்க்க

``இப்போதைக்கு வாக்காளர் அடையாளம்தான் குறி அதைத் தொடர்ந்து..!"- ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, போலியான வாக்காளர்களைப் புகுத்துவதற்கான 'பெ... மேலும் பார்க்க

`75 வயதில் ஓய்வா? நான் அப்படி கூறவில்லையே! பாஜகவுடன் எந்த மோதலும் இல்லை’ - RSS தலைவர் மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அதன் தலைவர் மோகன் பகவத் டெல்லியின் விக்யான் பவனில் நடந்த 'ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு சொற்பொழிவு' நிகழ்வில் உரையாற்றினார். அப்போது, ``பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசுடன... மேலும் பார்க்க

Arundhati roy: ``தேசியவாதிகள் 99% பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்'' - அருந்ததி ராய் சொல்வதென்ன?

நூல் வெளியீட்டு விழாவில் அருந்ததி ராய் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், "Mother Mary Comes to Me" என்ற தனது புதிய நினைவுப் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்நூல் அவரது தாயார் மேரி ராய் உடனான சிக்... மேலும் பார்க்க