செய்திகள் :

Career: 'இனி ரெஸ்யூம் வேண்டாம்!' சொல்லும் நிறுவனங்கள்; அதற்கு மாற்று என்ன?

post image

'மாற்றம் ஒன்று தான் மாறாதது'.

எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் சேர வேண்டுமானால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் சி.வி (Curriculum Vitae) கொடுத்துக்கொண்டிருந்தோம். கடந்த 10 ஆண்டுகளாக ரெஸ்யூம் கொடுத்து வந்தோம். இப்போது டிரெண்ட் மாறிவிட்டது... இப்போது வேலைக்குச் சேர வேண்டுமானால் பெரும்பாலான நிறுவனங்கள், 'உங்க லிங்க்ட் இன் புரொபைல் அனுப்புங்க' என்று கூறுகிறார்கள். அதனால், அதற்கேற்ப அப்டேட் ஆகிக்கொள்வது அவசியம்.

லிங்க்ட் இன் என்பது ஒரு ஆப். இந்த ஆப் மூலம் நாம் வேலை தேடலாம்... நம்முடைய வேலை மற்றும் புரொபைல் பிடித்திருந்தால், எதாவது நிறுவனம் நமக்கு வேலை கொடுக்கலாம். இதே மாதிரியான ஆப்கள் பல சந்தையில் உள்ளன. ஆனால், லிங்க்ட் இன் மீதான நம்பகத்தன்மை தான் சந்தையில் அதிகம்.

ஒன்று... இரண்டு... மூன்று...

ஒன்று லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக இருப்பவர்கள், இரண்டு லிங்க்ட் இன் கணக்கு இருக்கும்... ஆனால், அதை பயன்படுத்தமாட்டார்கள், மூன்று லிங்க்ட் இன் கணக்கே இல்லாதவர்கள். இதில் இரண்டாமவர்கள் லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக மாற வேண்டும். மூன்றாமவர்கள் லிங்க்ட் இன் கணக்கு தொடங்கி, அதில் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

'கணக்கு தானே ஆரம்பிக்க வேண்டும்' என்று அத்தோடு நின்றுவிடக்கூடாது. லிங்க்ட் இன் புரொபைலில் சுய விவரங்கள், படிப்பு, ஸ்கில் என அனைத்தையும் பக்காவாக பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, உங்கள் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், உங்கள் துறையில் இருக்கும் பிரபலமான ஆட்கள் அவர்களுடன் கனெக்‌ஷன் கொடுங்கள்.

நீங்கள் புதிதாக எதாவது படித்தாலோ, கற்றுக்கொண்டாலோ, அதைத் தொடர்ந்து அப்டேட் செய்யுங்கள். வேலையில் ஏதாவது அப்டேட் இருந்தால் அதையும் மறக்காமல் பதிவிட்டுவிடுங்கள்.

இவற்றைத் தொடர்ந்து செய்யும்போது, உங்களுடைய ஒவ்வொரு பணி நிமித்தமான நகர்வுகளும் பதிவாகிவிடும். அதனால், நீங்கள் பணிக்கு விண்ணப்பித்து லிங்க்ட் இன் புரொபைலை அனுப்பும்போது, உங்களுடைய எந்த அப்டேட்டுகளும் மிஸ் ஆகாது.

இவர்கள் மட்டுமல்ல; நீங்களும் தான்...

இது வேலைக்குச் சேரும்போது தான் லிங்க்ட் இன் புரொபைல் உதவும் என்றில்லை. ஏற்கெனவே வேலையில் இருந்தாலும், லிங்க்ட் இன்னில் ஆக்டிவாக இருக்கும்போது, உங்களுடைய துறையில் இருக்கும் சக நண்பர்களுடன் நல்ல நட்பு ஏற்படும். இது நிச்சயம் உங்கள் கரியருக்கு உதவும்.

ஹேப்பி நெட்வொர்க்கிங்:)

Career: 'இந்த' டிப்ளமோ படித்தவரா நீங்கள்? - உங்களுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? ஒப்பந்த அடிப்படையில் ஃபீல்டு சூப்பர்வைசர் (பாதுகாப்பு) பணி. மொத்த காலிபணியிடங்கள்: 28வயது வரம்பு:... மேலும் பார்க்க

Career: வேலை கிடைச்சுருச்சுனு சும்மா உக்காந்திராதீங்க; கரியரில் 'இது' ரொம்பவே முக்கியம் பிகிலு

பலவித டெக்னாலஜி சூழ்ந்து கிடக்கிற இந்த உலகத்தில் போட்டிகளும் பல. 'வேலை தான் கிடைச்சாச்சே...', 'அடுத்த வேலை வாங்க இந்த எக்ஸ்பீரியன்ஸ் போதும்' என்று நீங்கள் அப்டேட் ஆவதை நிறுத்திவிடாதீர்கள். 'கற்றது கை ... மேலும் பார்க்க

Career : இன்டர்வியூவில் செலக்ட் ஆக வேண்டுமா... 'இந்த' ஆராய்ச்சி ரொம்ப ரொம்ப முக்கியம் பாஸ்!

நேர்காணலுக்கு செல்லும் அனைவரும் 'செல்ஃப் இன்ட்ரோ', 'வேலை சம்பந்தமான விஷயங்களை' விழுந்து விழுந்து தயார் செய்துகொண்டு போவார்கள். இவை முக்கியம்தான். ஆனால், இதை விட முக்கியம் நமக்கு வேலை கொடுக்கும் நிறுவன... மேலும் பார்க்க

Career: 'பள்ளிப் படிப்பு மட்டும் முடித்தவரா நீங்கள்... மத்திய அரசு வேலை காத்திருக்கிறது!'

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி?சமையல்காரர், தையல்காரர், வெல்டர், பெயின்டர் உள்ளிட்ட வேலைகள். குறிப்பு: ஆண்கள், பெண்கள் இருவரும் இந்தப் பணிக்கு விண்ணப்பி... மேலும் பார்க்க

Career Guidance: இன்டர்வியூவில் `Sorry' கேட்காதீங்க... இன்டர்வியூவை எப்படி அணுக வேண்டும்..?

ஒரு இன்டர்வியூவிற்கு செல்கிறீர்கள்... உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? திக் திக்...பக் பக் என்று தானே இருக்கும். அப்படி இருந்தால் முதலில் மனதை தேற்றிக்கொள்ளுங்கள். 'இந்த வேலை எனக்கு தான்' என்ற நம்பிக்க... மேலும் பார்க்க

Career: எந்த டிகிரி படித்திருந்தாலும் 'ஓகே'... வங்கியில் மேனேஜர் பணி; லட்சங்களில் சம்பளம்!

ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.என்ன பணி?ஜூனியர் அசிஸ்டன்ட் மேனேஜர். இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வங்கி மற்றும் நிதி துறையில் டிப்ளமோ படிப்பு படிக்க... மேலும் பார்க்க