செய்திகள் :

Chief Dating Officer : பெங்களூரில் காதலில் கைதேர்ந்தவருக்கு வேலை; தகுதி என்னவென்று தெரியுமா?!

post image

காதலர் தினம் நெருங்குவதனால் காதலைச் சுற்றிய விநோதங்கள் நம் கண்முன் வந்து விழுவது எதிர்பார்த்ததுதான். ஆனால் காதலில் கைதேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதெல்லாம் யாவருக்கும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.

தலைமை டேட்டிங் அதிகாரி (Chief Dating Officer) என்ற வேலையை அறிமுகப்படுத்தியுள்ளது, பெங்களூரைச் சேர்ந்த ஓர் ஆலோசனை நிறுவனம்.

இந்த வேலையைப் பெறுவதற்கு பெரிய கல்வித்தகுதி எல்லாம் வேண்டாம். மொழி புலமை மட்டுமே போதும் என்கின்றனர். என்ன மொழியா... 'காதல் மொழி'தான்!

நவீன காதல், காதல் தோல்வி, டேட்டிங் ஆப்கள் போன்றவற்றில் கைதேர்ந்த ஒருவரைத் தேடுகிறது Topmate நிறுவனம்.

இந்த வேலை தான் காதலிக்கிறோமோ இல்லையோ, காதல் ஆலோசனைகளை அள்ளி வழங்கும் நண்பர்களுக்கு நன்றாகப் பொருந்தும்.

Dating

"இன்றைய டேட்டிங் கலாசாரத்தில் கரைந்து தேர்ச்சி பெற்ற ஒருவர் எங்களுக்குத் தேவை. 'ghosting,' 'breadcrumbing,' உள்ளிட்ட அனைத்து காதல் சொற்களையும், செயல்பாடுகளையும் புரிந்துகொள்ளும், 'ஜோடிகளை சேர்த்து வைப்பவராக' நீங்கள் இருந்தால் உங்களை வலதுபக்கம் ஸ்வைப் செய்கிறோம் (தேர்ந்தெடுக்கிறோம்)." என இந்த வேலை குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் கீழ்காணும் 3 தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

1. குறைந்த பட்சம் ஒரு பிரேக்-அப், இரண்டு சிட்டுவேஷன்ஷிப் (situationship), மூன்று டேட்டிங்களை கடந்து வந்திருக்க வேண்டும்.

2. இன்றைய டேட்டிங் குறித்து ஆழமான அறிவு வேண்டும். புதிய ட்ரெண்டை உருவாக்ககும் கிரியேடிவிட்டி இருக்க வேண்டும்.

3. குறைந்து 2,3 டேட்டிங் ஆப்களை பயன்படுத்திய அனுபவம் இருக்க வேண்டும்.

டாப்மேட் நிறுவனத்தின் விருப்பமான விண்ணப்பதாரர் ஒரு டேட்டுக்கான வாய்ப்பைப் பெறுவார்.

Relationship: பிடிக்காத கணவன்; வேறோர் ஆணிடம் ஈர்ப்பு... உளவியலும் தீர்வுகளும்..!

'நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு' - விருப்பமில்லாத திருமணமும் மனதுக்குப் பிடிக்காத ஆணும் தன் வாழ்க்கையில் நுழைந்தால் ஒரு பெண் எப்படி உணர்வாள் என்பதை விளக்கும் 'மெளனராகம்' பட வசனம் இது.... மேலும் பார்க்க

வரதட்சணை: ``ரூ.5 லட்சம் வேண்டாம்; ஒத்த ரூபாய் போதும்" - மணமகள் வீட்டாரை நெகிழ வைத்த மணமகனின் செயல்!

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் எப்படி தவறோ, அதுபோல வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் தவறுதான். ஆனால், படித்த முன்னேறிய சமூகத்தினர் கூட வரதட்சணையை இன்றைய காலகட்டத்தில் வாங்காமலோ கொடுக்காமலோ இர... மேலும் பார்க்க

Dating: 8 ஆண்டுகள், 2000 டேட்டிங் தோல்விகள்... இறுதியில் டேட்டிங் ஏஜென்சி தொடங்கிய ஜப்பான் இளைஞர்!

மனிதர்கள் மட்டுமல்ல எந்த உயிரினத்துக்கும் தனக்கான ஒரு துணையைத் தேடிக்கொள்வது வாழ்வின் இன்றியமையாத போராட்டமாக அமைகிறது. சில உயிர்களுக்கு அது வெறும் உயிரியல் துணைதான் என்றாலும், அதற்காக உயிர்போகும் வரை ... மேலும் பார்க்க

Relationship: பெண்களின் முகமா; குணமா? எது ஆண்களை முதலில் ஈர்க்கிறது?

அக இலக்கியங்களில் ஆரம்பித்து முகநூல் கவிதைகள் வரைக்கும், பெண்களின் குணத்தைவிட அவர்களுடைய புற அழகைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்பதற்கு எண்ணிடலங்கா சாட்சிகள் இருக்கின்றன... ஆண் ஏன் காலங்காலம... மேலும் பார்க்க

சோசியல் மீடியாவால் தம்பதிகளுக்கு இடையே காதல் கூடியிருக்கிறதா? - உளவியல் நிபுணர் சொல்வதென்ன?

இன்றைய டிஜிட்டல் உலகில், சோசியல் மீடியா நம் அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. உறங்கி எழும்போதே கைகள் செல்ஃபோனை தேட ஆரம்பித்து விடுகின்றன. வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்கள் எல்லாம் பார்த்துவிட்டு, இன... மேலும் பார்க்க

Love: விழுப்புரம் பையன் உக்ரைன் பொண்ணு... சேர்த்து வைத்த பெரியாரிய கொள்கை; காதல் ததும்பும் இளம் ஜோடி

காதலுக்கு இந்த மொத்த உலகமுமே ஒரு சிற்றூர்தான். சாதி, மதம் பார்க்காது, இனம், மொழி கேட்காது. யாராயினும் அன்பென்றால் வரவேற்கும், சமத்துவத்தை வளர்த்தெடுக்கும். எல்லாவற்றுக்கும் மேல், ஒருவருக்கொருவர் மனம் ... மேலும் பார்க்க