செய்திகள் :

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்தை குறித்து கவாய்

post image

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது...

"கட்டடக் கலை கலைஞர் ஆக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், என் தந்தைக்கு வேறு கனவு இருந்தது.

அவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்று ஆசை. ஆனால், அவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காகக் கைது செய்யப்பட்டதால், அவரால் வழக்கறிஞராக ஆக முடியவில்லை.

இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய்
இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய்

அதனால், அனைத்து பொறுப்புகளும் என் அம்மா, அத்தை மேல் விழுந்தது. எனது தந்தை அம்பேத்கரின் கொள்கைகளுக்கு அவரது வாழ்க்கையைக் கொடுத்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் எதாவது அர்த்தமுள்ளதாகச் செய்வேன் என்று என் தந்தை எப்போதும் நம்பினார்.

என்னுடைய பெயர் உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டப்போது. என் தந்தை என்னிடம் கூறியது...

'நீ வழக்கறிஞராக இருந்தால், பணத்திற்குப் பின்னால்தான் செல்வாய். அதுவே நீதிபதியானால், டாக்டர் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்... சமூகதிற்கு நல்லது செய்வாய்'

நாட்டிலேயே உயர்ந்த நீதி பதவியை பெற்றபோது என் தந்தை என்னுடன் இல்லை. ஆனால், என் தாய் இதைப் பார்த்தார்" என்று கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: "பள்ளிகளிலும் போலீஸ் இருக்கணுமா?" - திரிணாமூல் எம்பி சர்ச்சை பேச்சு

நேற்று முன்தினம், கொல்கத்தா சட்டக் கல்லூரி ஒன்றில், அந்தக் கல்லூரி மாணவி ஒருவரை, அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத... மேலும் பார்க்க

பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: 'கைதான பிரதீப் உடன் தொடர்பு?' - வினோஜ் P.செல்வம் விளக்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது. பிரதீப்புக்கு, வினோ... மேலும் பார்க்க

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க

"தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடிக்க காரணம் இதான்" - ஜெய்சங்கர் சொல்லும் விளக்கம் என்ன?

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து, சிறையில் அடைப்பது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதைத் தடுக்க தொடர்ந்து கோரிக்கைகள், போராட்டங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இந்த நிலையில், இலங்கை ... மேலும் பார்க்க

Trump: "தாக்குதல் நிறுத்தம், வணிக ஒப்பந்தம் ட்ரம்பே அறிவிக்கிறார்; அப்போ இந்தியா?" - ப.சிதம்பரம்

நேற்று அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், இந்தியா, அமெரிக்கா இடையே மிகப்பெரிய வணிக ஒப்பந்தம் நிறைவேற உள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிர... மேலும் பார்க்க