செய்திகள் :

Coolie: `ட்ரோல் செய்பவர்களுக்கும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றி!' - 'கூலி' நடிகை ரச்சிதா ராம் பதிவு!

post image

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த 'கூலி' திரைப்படம் கடந்த 14-ம் தேதி வெளியாகியிருந்தது.

லோகேஷ் கனகராஜ் எப்போதுமே தன்னுடைய திரைப்படங்களில் பெரிதளவில் தமிழ் ஆடியன்ஸுக்கு பரிச்சயமில்லாத நடிகர்களை வைத்து சர்ப்ரைஸ் காட்சிகளை கொடுத்துவிடுவார்.

Rachita Ram - Coolie
Rachita Ram - Coolie

அதற்கு எடுத்துக்காட்டாக, 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.

அதுபோல, 'கூலி' திரைப்படத்தில் கன்னட நடிகை ரச்சிதாவின் கல்யாணி கதாபாத்திரத்தை வைத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

நடிகை ரச்சிதாவைப் பாராட்டி பலரும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தனக்கு இப்படியான வரவேற்பு கிடைத்தது குறித்து நடிகை ரச்சிதா ராம், "'கூலி' திரைப்படத்தின் என்னுடைய கல்யாணி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

விமர்சனங்களும், என் கதாபாத்திரத்திற்கு கிடைத்த அன்பும் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது! ஊடகங்கள், விமர்சகர்கள், மற்றும் ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் போடுபவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை நம்பி எனக்கு இப்படியான வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

லெஜெண்ட்ஸுடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். படத்தின் வெற்றிக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`50 வருஷமா லட்சக்கணக்குல வீணாக்கிட்டோம்; அதனால..' கூலி ரிலீஸ் நாளில் ரஜினி ரசிகர்கள் எடுத்த முடிவு

'தலைவர் சினிமாவுக்கு வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இதுல கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல நாங்களும் படம் ரிலீசாகுறப்பெல்லாம் கட் அவுட், போஸ்டர், பாலபிஷேகம்னு லட்சக்கணக்குல பணம் செலவு செய்திருப்போம். இப்ப ய... மேலும் பார்க்க

Rajini:``நெற்றியில் திருநீறும் நெஞ்சத்தில் தேசப்பற்றும்" - ரஜினியை சந்தித்த நயினார் நாகேந்திரன்!

திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்துக்கு முக்கிய இடமுண்டு. நடிகர் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அதற்காக தமிழ், மலையாளம், தெலுங்கு முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை ... மேலும் பார்க்க

Dhanush: 'இட்லி கடை' 2nd சிங்கிள்; D54 படப்பிடிப்பு அப்டேட், தயாராகும் D55 இயக்குநர்

தனுஷ் இயக்கி நடிக்கும் 'இட்லி கடை' அக்டோபர் முதல் தேதியன்று திரைக்கு வருவதால், அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் பரபரக்கிறது. இன்னொரு பக்கம் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் மும்முரமாக நடித்து வ... மேலும் பார்க்க

VIT Chennai: முன்னாள் மாணவர்களின் சந்திப்பு; சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கமல்ஹாசன்

விஐடி சென்னையின் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி விஐடி சென்னை வளாகத்தில் 15.8.2025 அன்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்துடன் பங்கேற... மேலும் பார்க்க

`உண்மையில் இது எனது முதல் 'Fan Boy' மொமன்ட்' - ஏ.ஆர் ரஹ்மான் குறித்து நெகிழ்ந்த சுஷின் ஷ்யாம்

மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'கிஷ்மத்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சுஷின் ஷ்யாம். இதனைத் தொடர்ந்து ‘கும்பளாங்கி நைட்ஸ்’,'ட்ரான்ஸ்’, ‘மாலிக்’, ‘மின்னல் முரளி’, ‘பீஷ்ம பருவம்’, ‘ரோமான்சம்’, ‘கண்ண... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியை சந்தித்து சினிமா வாய்ப்பு கேட்ட இளைஞர்கள்; என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி, இரண்டு யூடியூபர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் கூறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் விஜய் சேதுபதி, தனது நடிப்பு திற... மேலும் பார்க்க