Coolie: "நாம் ஒன்றாகப் பயணித்த நீண்ட பயணம் இது" - எடிட்டர் பிலோமின் ராஜ் குறித்து லோகேஷ் நெகிழ்ச்சி
ரஜினி காந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் எடிட்டரான பிலோமின் ராஜுக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமூக வலைதளப் பதிவில் உருக்கமான நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜின் பதிவு
லோகேஷ் கனகராஜ், தனது முதல் படம் முதல் ‘கூலி’ வரையிலான பயணத்தில், எடிட்டர் பிலோமின் ராஜின் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.
“நாம் ஒன்றாகப் பயணித்த நீண்ட பயணம் இது. உனது பொறுமை, உணர்வு, மற்றும் விடாமுயற்சி ஒவ்வொரு படத்தையும் மேலும் சிறப்பாக்கியுள்ளது. எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்து எங்கள் கதைகள் திரையில் வருவதை உறுதி செய்ததற்கு மிகுந்த அன்பும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என்று லோகேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கூலி திரைப்படம்
ரஜினி காந்த் தனது 171வது படமாக ‘கூலி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி காந்த் ‘தேவா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிரார். நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஆமிர் கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும், பூஜா ஹெக்டே ‘மோனிகா’ என்ற பாடலில் சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருக்கிறார். ’கூலி’ திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...