செய்திகள் :

Cricket: ``இந்தியாவில் விளையாடுவதற்கு ஆர்வமில்லை'' - பாகிஸ்தான் கிரிக்கெட்டர் கூறுவது என்ன?

post image

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பைப் போட்டு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் தகுதிப்பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், 'பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது' என பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல் ஃபெரோசா தெரிவித்திருக்கிறார்.

Gull Feroza
Gull Feroza

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``நாங்கள் ஆசிய அளவில் விளையாடுவோம் என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் இந்தியாவில் விளையாடப்போவதில்லை. இதை தெளிவாக கூறுகிறோம். இந்தியாவில் விளையாடுவதில் எங்களுக்கும் ஆர்வம் இல்லை. இலங்கை துபாய் என எங்கு விளையாடினாலும் ஆசியாவில் நீங்கள் பெறும் தகுதிகளைப் போலவே அதுவும். தகுதிச் சுற்றுகள் சொந்த ஊரில் இருந்தன" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் தொடக்க வீராங்கனையாக மூன்று ஆட்டங்களில் பங்கேற்ற ஃபெரோசா, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்பாக நடந்த விவாதங்கள் தொடர்ந்த நிலையில் இந்த பதில் வந்திருக்கிறது.

மோஷின் நக்வி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் மொஹ்சின் நக்வி ஏற்கெனவே உலகக் கோப்பைக்காக பாகிஸ்தான் டீம் இந்தியாவுக்கு வராது எனக் கூறி இந்தியாவுக்கு பயணம் செய்யாது" என்று கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதகக்து.

விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதி ஏன் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்கள்? - ஸ்ரீராம் நெனே சொன்ன காரணம்

விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். ஆடம்பரம் மற்றும் ஆரவாரங்களில் இருந்து விலகி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். கடந்தாண்டு இந்தியாவை விட்டு லண்டனில் விராட் ... மேலும் பார்க்க

IPL 2025: "ஏலத்தில் கோட்டை விட்டோமா?" - CSK பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதில்

ஏழாவது தோல்வியுடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சன்ரைசர்ஸ் அணியுடனான தோல்விக்குப் பிறகு அந்த ஆட்டம் குறித்தும் சி.எஸ்.கே எதிர்காலம் குறித்தும் ப... மேலும் பார்க்க

"சர்வதேச டி20-யிலிருந்து சீக்கிரமாக ஓய்வுபெற்றுவிட்டார்" - Kohli ஃபார்ம் பற்றி முன்னாள் CSK வீரர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல் சீசனில் முதல் முறையாகத் தனது சொந்த மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 24) வெற்றிபெற்றது. ராஜஸ்தானுக்கெதிரான இப்போட்டியில் முதலில் ... மேலும் பார்க்க

CSK vs SRH: ஆடத் தெரியாத பேட்டர்கள்; அடைக்க முடியாத ஓட்டைகள்; திணறும் தோனி- CSK எப்படி வீழ்ந்தது?

'சென்னை vs ஹைதராபாத்'சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில், '6 போட்டிகளையும் தொடர்ந்து வென்று ப்ளே ஆப்ஸூக்கு செல்லும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.' என ப்ளெம்மிங் பேசி... மேலும் பார்க்க

Fleming: இளம் வீரர்களுக்கு எதிராக தவறான தகவல்; தவறான அணுகுமுறை.. முரண்பாடாக பேசும் ப்ளெம்மிங்!

'இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!'சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வ... மேலும் பார்க்க