செய்திகள் :

CUB: இரண்டாவது முறையாக 'IBA Banking Technology' விருதை வென்ற சிட்டி யூனியன் வங்கி

post image
அண்மையில், 24 ஜனவரி 2025 அன்று மும்பையில் முடிவடைந்த ‘20வது வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருதுகள் 2024’ -ல் சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்றுள்ளது.

CUB தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஏழு பிரிவுகளிலும் IBA விருதுகளைப் பெறுகிறது. வங்கிகளின் புதுமையான தொழில்நுட்பச் சேவைகளை ஊக்குவிக்கவும், வங்கிகளிடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் IBA இந்த விருதுகளை வங்கிகளுக்கு வழங்கி வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் திரு. டி.ரபி சங்கர், சிட்டி யூனியன் வங்கியின் தொழில்நுட்பக் குழு முன்னிலையில் வங்கியின் செயல் இயக்குநர் திரு விஜய் ஆனந்திடம் விருதுகளை வழங்கினார்.

விருது வென்ற சிட்டி யூனியன் வங்கி
விருது வென்ற சிட்டி யூனியன் வங்கி

நிகழ்ச்சியில் பேசிய திரு விஜய் ஆனந்த், “ ஆண்டுதோறும் 7 பிரிவுகளிலும் IBA விருதுகளைப் பெறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான அங்கீகாரமாக இந்த  IBA விருதுகள் அமைந்துள்ளன.  எங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக தொடர்ந்து புதிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 -ல் நடைபெற்ற Global Fintech Fest 2024 -ன் போது எங்கள் வாடிக்கையாளர்களுக்காக 8 புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினோம். எங்கள் வாடிக்கையாளர்களின் நலனுக்காக புதிய தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளில் புதுமை சேர்ப்பதோடு, வரும் ஆண்டுகளில் அனைத்துப் பிரிவுகளிலும் IBA விருதுகளைப் பெற ஒற்றுமையுடன் செயல்படுவோம்”  என்று தெரிவித்தார்.

CUB வங்கி பின்வரும் பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது:

Best Digital sales, Payments & Engagement

Best IT risk management 

Best Fintech & Digital Payment Index (DPI) adoption   

Best Financial Inclusion 

CUB பின்வரும் பிரிவுகளில் இரண்டாம் இடத்திற்கான (Runner up) விருதுகளை பெற்றது.

Best AI & ML Adoption

CUB பின்வரும் பிரிவுகளில் சிறப்பு விருதுகளைப் பெற்றது 

Best Technology Talent & Organisation. 

Best Technology Bank 

விருது வென்ற சிட்டி யூனியன் வங்கி
விருது வென்ற சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 1904 -ல் நிறுவப்பட்ட இந்தியாவின் பழமையான தனியார்த் துறை வங்கி ஆகும். இவ்வங்கி கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு 120 ஆண்டுகளைக் கடந்து தேசத்திற்கு சேவையாற்றி வருகிறது. வங்கிக்கு நாடு முழுவதும் 827 கிளைகள் மற்றும் 1697 ஏடிஎம்கள் உள்ளன.

வாடிக்கையாளர்களின் பல்வேறு பரிவர்த்தனை தேவைகளைப்  பூர்த்தி செய்ய மேம்பட்ட தொழில்நுட்பத்  தீர்வுகளை வழங்குவதில் CUB எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது.  கீ செயின் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் வாயிலாக POS இயந்திரம் மூலமாக விரைவாக பணம் செலுத்துதல்,  மொபைல் பேங்கிங்கில் உள்நுழைவதற்கான குரல் அடிப்படையிலான அங்கீகாரம், பிராந்திய மொழிகளில் பன்மொழி வாய்ஸ் சாட்பாட், குரல் அடிப்படையிலான UPI123 பே, முழுவதுமான டிஜிட்டல் லோன் செயல்முறை மற்றும் Cyber மோசடியிலிருந்து Nap Id மூலம் பல அடுக்கு பாதுகாப்பு  ஆகியவை இந்த முயற்சியில்  வங்கியின் புதுமைகள் ஆகும்.

சிட்டி யூனியன் வங்கி, ஏடிஎம்கள், பணம் செலுத்தும் இயந்திரங்கள், நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், இ-வாலட், சோஷியல் மீடியா பேங்கிங், QR குறியீடுகள் உள்ளிட்ட தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகளை தனிநபர் மற்றும் வர்த்தக வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.

Repo Rate: 'ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு' - உங்களுக்கு என்ன பயன்? - பொருளாதார நிபுணரின் விளக்கம்

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு இது முதல் மீட்டிங். 2024-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இருந்து ரெப்போ வட்டி 6.50 ஆகவே தொடர்ந்து வந்தது. இடையில் ஏகப்பட்ட மீட்டிங்குகள் நடந்தாலும... மேலும் பார்க்க