செய்திகள் :

CWC: `அந்த நிகழ்ச்சியில் இதைதான் பகிர்ந்தேன்; மாற்றிப் பரப்புவது நியாயமற்றது'- லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

post image

நடிகை மற்றும் இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இப்போது 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கமல் ஹாசன் தொடர்பாகப் பேசியிருந்தார்.

அங்கு அவர் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகப் பரவியது.

அதில் அவர், "கமலை எனக்குப் பிடிக்கும். அதை அவரிடம் தெரிவிக்க முயன்றபோது அவர் தங்கை என்று சொல்லிவிட்டார்," எனக் கூறியிருக்கிறார்.

அவர் பேசிய விஷயம் வைரலானதைத் தொடர்ந்து, தற்போது அதற்கு விளக்கமும் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், "நான் 16ஆம் வயதில் நிச்சயதார்த்தம் செய்து, 18ஆம் வயதில் திருமணம் செய்தேன்.

42 வயது வரை எனக்கு சினிமா உலகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. மற்ற பலரைப் போலவே, நானும் நட்சத்திரங்களை ஒரு ரசிகையாகவும், குழந்தைபோன்ற ஆச்சரியத்துடனும் பார்த்தவள்தான்.

45 வயதில் ஒரு பிரபல நடிகரை நேரில் சந்தித்தபோது, உண்மையிலேயே 'star-struck' ஆகிவிட்டேன்.

அவர் என்னைப் பார்த்து, 'என் சகோதரி மாதிரி இருக்கிறீர்கள்' என்று சொன்னதும், என் நண்பர்கள் நகைச்சுவையாகக் கலாய்த்தார்கள்.

இதைத்தான் நான் 'குக் வித் கோமாளி'யில் நன்றாக ரசித்துப் பகிர்ந்தேன். இதைத் தவறாகப் புரிந்து, செய்தியாக மாற்றிப் பரப்புவது நியாயமற்றது மட்டுமல்லாமல், மிகுந்த நாகரிகமற்றதும்கூட!" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Anirudh: `யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள்?' - அனிருத் பதில் இதுதான்!

'கூலி' படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார். அவரைத் தொடர்ந்து இசைய... மேலும் பார்க்க

House Mates Review: `இது புதுசு சாரே!' - எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறதா இந்த ஹாரர் ஃபேண்டஸி?

பெற்றோரை இழந்த தர்ஷன், தன் காதலி அர்ஷா சாந்தினி பைஜூவை அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை, இன்னொருவரிடமிருந்து... மேலும் பார்க்க

Anirudh: "அந்த 8 பேருக்கு பிடிக்கலைன்னா டியூனை மாத்திடுவேன்" - அனிருத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்திருக்கும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரமாண்டமாக திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.... மேலும் பார்க்க

Yesudas: ``கர்நாடக இசை மீது யேசுதாஸ் அன்பு ஆச்சரியமானது!'' - அமெரிக்காவில் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ. ஆர். ரஹ்மான் எப்போதும் பயணங்களை அதிகமாக விரும்புவார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு முக்கியமான பிரபலங்கள் சிலரையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட 'ஓப்பன் ஏஐ'-யின் சி.இ.ஒ சாம் ஆ... மேலும் பார்க்க

What to watch - Theatre: `உசுரே, Housemates, Meesha, Kingdom' - இந்த வார ரிலீஸ்!

உசுரே (தமிழ்)உசுரேநவீன் டி. கோபால் இயக்கத்தில் டி ஜே அருணாச்சலம், ஜனனி குணசீலன், ராசி, மனோகர், கதிர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் 'உசுரே'. கிராமத்துக் காதல் கதையான இது இந்த ஆகஸ்... மேலும் பார்க்க

What to watch - OTT: '3BHK, 28YearsLater, My Oxford Year' - இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்தமிழ்3BHK (Tamil + Telugu) - PrimeVideo தெலுங்குRed Sandal Wood (Telugu) - ETvwinThammudu (Telugu + Multi) - NetflixThankyouNanna (Telugu) - ETvWinமலையாளம்Super Zindagi (Ma... மேலும் பார்க்க