செய்திகள் :

D54: 'போர் தொழில்' பட கூட்டணி; கதாநாயகியாக மமிதா பைஜூ, தொடங்கிய படப்பிடிப்பு! - தனுஷ் பட அப்டேட்

post image

தனுஷ் இப்போது அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார். ஆனந்த் எல். ராயின் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் களமிறங்கிவிட்டார்.

வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பிருந்தே பேசப்பட்டு வந்தது.

Dhanush - D54
Dhanush - D54

சமீபத்தில், வேல்ஸ் நிறுவனம் தங்களுடைய லைன் அப்பில் இருக்கும் இயக்குநர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் விக்னேஷ் ராஜாவின் பெயரும் இருந்தது.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் அறிவிப்பை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். படத்திற்கு பூஜை போட்டு, இன்று படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார்கள்.

பூஜைக்கு சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றி மாறனும் வருகை தந்திருக்கிறார். 'போர் தொழில்' படத்தின் திரைக்கதையாசிரியர்கள் கூட்டணியான ஆல்ஃப்ரெட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதை வேலைகளைக் கவனித்திருக்கிறார்கள்.

படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு தமிழ் சினிமாவின் சென்சேஷன் மமிதா பைஜூ கமிட்டாகியிருக்கிறார்.

Dhanush - D54
Dhanush - D54

இவரைத் தாண்டி, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன் எனப் பலரும் படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தைத் தாண்டி, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பலமான லைன் அப்களை தனது கைவசம் வைத்திருக்கிறார். தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' திரைப்படமும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

Oho Enthan Baby Review: இளமை துள்ளும் காதல் கதையின் ஓப்பனிங்கலாம் நல்லாயிருக்கு... ஆனா ஃபினிஷிங்?

சிறுவயதிலிருந்தே பெற்றோரின் சண்டைகள், அதனால் வீட்டில் நிலவும் பதற்றம் ஆகியவற்றிலிருந்து தப்பிக்க சினிமாவை தோழனாக மாற்றிக்கொள்கிறான் அஷ்வின் (ருத்ரா). வளர்ந்த பின் சினிமாவில் இயக்குநர் ஆக வேண்டும் என்ற... மேலும் பார்க்க

Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்..." - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `75 வயசுல... ஸ்லோ மோஷனில் நடந்துவர்ற இந்த ரஜினியை ஏன் கூப்பிட்டிருக்காங்கனு..!’ - ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க

வேள்பாரி: `முதல்வர் இருந்த மேடையில் `ஓல்ட் ஸ்டூடண்ட்’னு பேசினேன்; இப்போ வரும்போதே.!’ - கலகலத்த ரஜினி

விகடன் பிரசுரத்தில், எம்.பி சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த புத்தகம் ‘வீரயுக நாயகன் வேள்பாரி'.இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனைய... மேலும் பார்க்க