செய்திகள் :

DC vs KKR: ``போட்டியின் திருப்புமுனையே அவர் வீசிய அந்த 2 ஓவர்தான்'' - வெற்றி குறித்து ரஹானே

post image

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.

கொல்கத்தா
கொல்கத்தா

அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் - டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது.

அந்த நேரத்தில் கொல்கத்தாவின் ஆன்ஃபீல்டு கேப்டனாக சுனில் நரைன் எடுத்த மாஸ்டர் மூவ்களால் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் பேட்டிங் (27 ரன்கள்), பவுலிங் (3 விக்கெட்டுகள்), ஃபீல்டிங் (கே.எல். ராகுல் ரன் அவுட்) கேப்டன்சி (வருண் சக்ரவர்த்தி 18-வது ஓவர் கொடுத்தது) என அனைத்திலும் கலக்கிய நரைனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபட்டது.

வெற்றிக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே, "13 ஓவர்களுக்குப் பிறகு நரைன் வீசிய இரண்டு ஓவர்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.

204 ரன்கள் நல்ல ஸ்கோர்தான், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். அனுகுல் ராய், வருண் ஆகியோர் நல்ல சப்போர்ட் கொடுத்தனர். நடுவில் ரஸல் ஒரு நல்ல ஓவர் வீசினார்.

இந்தப் பிட்ச்சில் இடதுகை ஸ்பின்னர்கள் எப்போதும் நன்றாகச் செயல்பட்டிருக்கின்றனர். அனுகுல் ராய் கடினமாக உழைத்து வருகிறார். இந்தப் போட்டியின் நம்பிக்கையைக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.

ரஹானே - அக்சர் படேல்
ரஹானே - அக்சர் படேல்

நரைன் எங்கள் அணியின் சாம்பியன் பவுலர். நிறைய போட்டிகளில் இதைச் செய்திருக்கிறார். நாங்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது அவரிடம் செல்ல முடியும்.

பயிற்சிக்கு சீக்கிரமாக வந்து மணிக்கணக்கில் பவுலிங் பயிற்சி எடுத்து, பேட்டிங்கிலும் பயிற்சியெடுக்கிறார். நரைனும், வருணும் நாங்கள் பெற்றிருப்பது எங்களுக்கு நல்லது.

ரஸலும் பவுலிங்கில் கடுமையாக உழைக்கிறார். வலைப்பயிற்சியில் நல்ல யார்க்கர்கள் வீசுகிறார். ஒரு அணியாக அவரை நாங்கள் ஆதரிப்போம்.

இந்த சீசனில் எப்போது பந்துவீசினாலும் விக்கெட் எடுத்து அசத்துகிறார்" என்று கூறினார். மேலும், கையில் ஏற்பட்ட காயம் குறித்து, "மோசமாக இல்லை, ஓகேதான்" என்று ரஹானே கூறினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 12-வது ஓவரில் கேப்டன் ரஹானே ஃபீல்டிங்கில் காயமடைந்து வெளியேறிய பிறகு, ஆன்பீல்டு கேப்டனாக நரைன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2025: ஜாலியாக கன்னத்தில் தட்டிய குல்தீப்... சட்டென ரின்கு சிங் கொடுத்த ஷாக் ரியாக்ஷன்! | Video

கொல்கத்தா அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையே நேற்று (ஏப்ரல் 29) ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப... மேலும் பார்க்க

DC vs KKR: "நான் சிறந்த ஃபீல்டர் இல்லை; ஆனால்..." - ஆட்ட நாயகன் நரைன் என்ன சொல்கிறார்?

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்... மேலும் பார்க்க

CSK vs PBKS: `இனி துணிச்சலாகத்தான் பேட்டிங் செய்வோம்!' - மைக் ஹஸ்ஸி உறுதி

நாளை சென்னை சேப்பாக்கத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார் மைக் ஹஸ்ஸி. சென்னை அணியின் மனநிலை, திட்டங்கள், வைபவ்... மேலும் பார்க்க

DC vs KKR: `நாங்கள் தோற்றதற்கு இதுதான் காரணம்..' - விளக்கும் டெல்லி கேப்டன் அக்சர்

ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்ன... மேலும் பார்க்க

DC vs KKR: 4 in 1-ஆக மாயம் செய்த நரைன்; டெல்லியின் வெற்றியைப் பறித்த அந்த ஒரு மொமென்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன.கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத... மேலும் பார்க்க

Vaibhav Suryavanshi: ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவித்த பீகார் முதலமைச்சர்!

IPL 2025 நேற்றைய போட்டிக்குப் பிறகு தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த சீசனின் அதிவேக அரைசதம் (17 பந்துகளில்), டி20 வரலாற்றில் குறைந்த ... மேலும் பார்க்க