செய்திகள் :

Delhi : "டெல்லியில் 2, 3 நாள்கள் மட்டுமே தங்குவேன்; ஆயுட்காலத்தைக் குறைத்துவிடும்" - நிதின் கட்கரி

post image

டெல்லியில் காற்று மாசுபாடு மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1 முதல் 10 வருடங்களைக் கடந்த டீசல் வாகனங்களுக்கும், 15 வருடங்களைக் கடந்த பெட்ரோல், சி.என்.ஜி வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பக்கூடாது என எரிபொருள் நிலையங்களுக்குக் கட்டுப்பாடு வித்தது பாஜக அரசு.

அதன்படி முதல் இரண்டு நாள்களில், 200 காலாவதியான வாகனங்களை அரசு பறிமுதல் செய்ததது.

Delhi Pollution - டெல்லி காற்று மாசு
Delhi Pollution - டெல்லி காற்று மாசு

மறுபக்கம், அரசின் இந்த நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுத்தாக நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்கள் கொதித்தனர்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும் பாஜக அரசுக்கெதிராக எதிர்ப்புகள் எழுந்தது.

பின்னர், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா, உடனடியாக இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், வாகனம் வெளியேற்றும் காற்று மாசின் அடிப்படையில் அத்தகைய வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் காற்று தர மேலாண்மை ஆணையத்துக்குக் கடிதம் எழுதினர்.

அதன் பின்னர், ஜூலை 3 தேதி முதல் எந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படவில்லை.

அரசால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைத் திருப்பிக்கொடுக்கும் பணி தொடங்கியிருக்கிறது.

இத்தகைய சூழலில், டெல்லியின் மாசு சாதாரண மக்களின் ஆயுட்காலத்தைக் குறைப்பதாகவும், தான் டெல்லிக்கு வந்தால் இரண்டு மூன்று நாள்கள்தான் தங்குவேன் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

உத்தரப்பிரதேசத்தில் மரக்கன்றுகள் நாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "டெல்லியில் இரண்டு மூன்று மட்டுமே நான் தங்குவேன். டெல்லிக்கு சென்றதும் எப்போது அங்கிருந்து புறப்படுவேன் என்றுதான் யோசிப்பேன்.

டெல்லியில் மாசுபாடு சாதாரண மக்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வழிவகுக்கிறது. இதைத் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எத்தனால் போன்ற மாற்று எரிபொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும், மரக்கன்று நடும் செயல்களைப் பெரிய அளவில் மேற்கொள்வதும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள தீர்வுகள்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

"மீனவர் படகுகளில் த.வெ.க பெயர் இருந்தால் மானியம் தர மறுப்பது அராஜகம்" - திமுக அரசுக்கு விஜய் கண்டனம்

மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய் அறி... மேலும் பார்க்க

திருவாரூர்: `துரோகம் தான் உங்க ட்ராக் ரெக்கார்டு, ஹிஸ்ட்ரி!’- எடப்பாடி பழனிசாமியை சாடிய ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் வந்தார். நேற்று 6 கிலோ மீட்டர் ரோடு ஷோ சென்ற பிறகு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். இன்று சன்னதி தெருவில் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு குறித்த... மேலும் பார்க்க

மீண்டும் பேசுபொருளாகும் கீழடி... ஶ்ரீராமன் அறிக்கை தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல்

கீழடி - இப்போது மீண்டும் பேசுப்பொருள் ஆகியுள்ளது. 2015-ம் ஆண்டு, கீழடியின் முதற்கட்ட ஆய்வுப்பணிகள் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கியது. 2017-ம் ஆண்டு மூன்றாம் கட்ட ஆய்வுப்பணிகளின் நடந்துகொண்டிர... மேலும் பார்க்க

`முருகரை நாங்கதான் பெருமைப்படுத்தினோம்’ - பாஜக அரசியலுக்கு இரையாகிறதா திராவிட மாடல்? | Long Read

'பெருமிதம் பேசும் சேகர் பாபு!'திருச்செந்தூர் கோயிலின் குடமுழுக்கை வெகு விமர்சையாக நடத்தி முடித்திருக்கிறது அறநிலையத்துறை. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், குடமுழுக்குக்கு பிறகு பத்திரிகையாளர்களை... மேலும் பார்க்க

வைகோ : `தாராளமாக வெளியேறி கொள்ளலாம்..!’ - கட்சியில் மீண்டும் பிளவு? ; என்ன நடக்கிறது மதிமுக-வில்?

கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர... மேலும் பார்க்க

`அரசு ஊழியர்களுக்கு எதிரா பேசவே கூடாதுன்னாங்க’ - தவெக-விலிருந்து விலகியது குறித்து காந்திமதிநாதன்

’புறம் பேசிப் பொய் சொல்லும் வார்த்தைகளைத் தலைமைக் கழகம் கேட்கக் கூடாது; அப்போதுதான் இயக்கம் வளர்ச்சி பெறும். அதேபோல் ஒன்மேன் ஆர்மியாக இருந்து உத்தரவு போடுவதைத் தவிருங்கள்’ எனக் காட்டமாக தகவலை அனுப்பி ... மேலும் பார்க்க