டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.85.44-ஆக முடிவு!
Dhanush: பாங்காக்கில் ஆக்ஷன்; அசத்தலான டூயட் ஷூட், 'இட்லி கடை'க்கு அடுத்து தனுஷை இயக்கும் இயக்குநர்
வியக்க வைக்கிறது தனுஷின் உழைப்பும், லைன் அப்களும். ஹீரோ, பாடலாசிரியர், இயக்குநர் என பல தளங்களில் இயக்கி வரும் அவர், நடிப்பு ஒரு பக்கம், இயக்கம் ஒரு பக்கம் என ஓடி ஓடி உழைத்து வருகிறார். இந்தியில் 'தேரே இஷ்க் மெய்க்', தமிழில் 'இட்லி கடை', பான் இண்டியா படமாக 'குபேரா' என கைவசம் வைத்துள்ளார்.

'தேரே இஷ்க் மெய்ன்'
'இட்லி கடை'யின் படப்பிடிப்புக்கு இடையே சின்னதொரு பிரேக் கிடைக்கவே இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மெய்ன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனந்தின் இயக்கத்தில் ஏற்கவே 'ராஞ்சனா', 'அட்ராங்கி ரே' என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சனூன் ஹீரோயின் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு டெல்லியிலும், மும்பையிலும் நடந்திருக்கிறது.
இதற்கிடையே 'குபேரா'வின் ரிலீஸ் தேதியும், 'இட்லி கடை'யின் ரிலீஸ் தேதியும் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுவிட்டன. அதனை அடுத்து அவர் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன் என பலரின் இயக்கத்தில் நடிக்கிறார். இதில் யாருடைய படம் முதலில் தொடங்குகிறது என்ற எதிர்பார்ப்பும் பலமாக இருக்கிறது. இது குறித்து விசாரிக்கையில் கிடைத்தவை.

''தனுஷின் 'இட்லி கடை' படப்பிடிப்பு தேனி பகுதிகளில் பெருபகுதி நடந்தது. அதனை தொடர்ந்து பொள்ளாச்சியிலும், இப்போது பாங்காக்கிலும் நடந்து வருகிறது. இந்த ஷெட்யூலில் தனுஷுடன் சத்யராஜ், பார்த்திபன், அருண்விஜய், ஷாலினி பாண்டே ஆகியோரும் இணைந்துள்ளனர்.
தனுஷ், அருண்விஜய் இருவருக்குமிடையேயான பரபர ஆக்ஷன் காட்சிகளும், தனுஷ், ஷாலினி பாண்டேவுடன் ஒரு பாடல் காட்சியும் படமாக்குகின்றனர். இந்த மாத இறுதியில் அங்கிருந்து திரும்புகின்றனர். இதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துவங்குமென தெரிகிறது.

'இட்லி கடை' ஷெட்யூலை முடித்து விட்டு அதே வேகத்தில் மும்பை பறக்கிறார். ஆனந்த் எல் ராயின் படப்பிடிப்பை தொடர்கிறார். இன்னொரு பக்கம் தமிழில் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் முடிவாகிவிட்டது. அந்த படத்திற்கான செட் ஒர்க் வேலைகள் ஒரு பக்கம் ஜரூராக நடந்து வருகிறது. த்ரில்லர், திரைக்கதைக்காக பேசப்பட்ட போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா.