செய்திகள் :

Disel: "இந்தப் படம் தீபாவளி ரிலீஸுக்கு என்ன தகுதி இருக்குனு கேட்ருக்காங்க"- ஹரிஷ் கல்யாண் எமோஷனல்

post image

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'.

இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று ( அக்.14) நடைபெற்றிருக்கிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், "ஒரு சில நாட்களுக்கு முன்பு தேவா (டீசல் பட தயாரிப்பாளர்) சாரிடம், 'இந்தப் படம் தீபாவளிக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது'என கேட்டிருக்கிறார்கள்.

டீசல் படத்தில்...
டீசல் படத்தில்...

பெரிய ஹீரோ இருக்கிறாரா, பெரிய இயக்குநர் இருக்கிறாரா, பெரிய ஹீரோயின் இருக்கிறாரா, பெரிய இசையமைப்பாளர் இருக்கிறாரா என கேட்டிருக்கிறார்கள்.

உண்மையில் அவர் மிகவும் மனது உடைந்து போய்விட்டார். இதை கேட்ட எனக்கும் வலியாக இருந்தது.

தீபாவளிக்கு படம் வெளியாக அப்படி என்ன தகுதி தேவை என எனக்குத் தெரியவில்லை.

ஒரு நல்ல படம், அதை நன்றாக விளம்பரப்படுத்தும் டீம் இருந்தால் கண்டிப்பாக வரலாம், அப்படித்தானே? எனவே அந்த நம்பிக்கையுடன் தீபாவளிக்கு ஒரு நல்ல, சுவாரஸ்யமான, பொழுதுபோக்காக இருக்கும் 'டீசல்' என்ற படத்துடன் நாங்கள் வருகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் வணங்கும் இறைவனும், பார்வையாளர்களும் எங்களை கைவிட மாட்டார்கள், கையை பிடித்து கூட்டி செல்வார்கள் என உறுதியாக நான் நம்புகிறேன்.

ஒரு பழமொழி உண்டு, ஒரு மரத்திலிருந்து பல லட்சம் வத்தி குச்சிகள் தயாரிக்கலாம். ஆனா ஒரு வத்தி குச்சி போதும், பல லட்சம் மரத்தை அழிக்க.

ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாண்

எனவே யாரையும் குறைத்து எடை போடாதீர்கள். தீபாவளிக்கு தலைவர் படம், அஜித் சார் படம் என பல நட்சத்திரங்களின் படங்களை பார்த்திருக்கிறேன்.

இந்த முறை என்னுடைய படமே தீபாவளிக்கு வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையே பெரிய முன்னேற்றமாக நினைக்கிறேன்.

என் பயணம் கடினமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த கஷ்டங்களை வெளியே சொல்லி சிம்பதி செய்ய விரும்பவில்லை.

பார்வையாளர்களைத் திருப்திபடுத்தினால் அதுவே போதும். அவர்கள் நம்மை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்கள்" என்று கூறியிருக்கிறார்.

Dude: ``அவருக்கு உரிய மரியாதை கொடுக்கலைனா தப்பு!" - தன்னுடைய உதவியாளருக்கு பிரதீப் செய்த விஷயம்!

பிரதீப் ரங்கநாதனின் `டியூட்' திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். பிரதீப் ரங்... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: ``நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன்!" - ரங்கராஜ் அறிக்கை!

கோவை மாதம்பட்டியைச் சேர்ந்த சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ் குறித்துதான் சமீப நாட்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.இவருக்கு ஷ்ருதி என்பவருடன் ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும்... மேலும் பார்க்க

Diesel: "இந்த சினிமாவில நம்மள தூக்கிவிடுறத்துக்கு யாரும் இல்ல"- கண்கலங்கிய ரிஷி ரித்விக்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

Diesel: "ஹரிஷ் கல்யாணோட சக்சஸ் என்னோட சக்சஸ் மாதிரி" - நடிகை அதுல்யா ரவி

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

"வெற்றிமாறன் சார் நினைச்சிருந்தா VoiceOver மட்டும் கொடுத்துட்டு போயிருக்கலாம்; ஆனால்"- ஹரிஷ் கல்யாண்

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'டீசல்'. இந்தத் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்... மேலும் பார்க்க