செய்திகள் :

Doctor Vikatan: எந்த Blood Group யாருக்குப் பொருந்தும்... தவறுதலாக ஏற்றினால் பிரச்னையா?

post image

Doctor Vikatan: ரத்த தானம் செய்யும்போதோ, யாருக்கேனும் ரத்தம் ஏற்றும்போதோ, எந்த  blood group யாருக்குப் பொருந்தும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது... ஒருவேளை பொருந்தாத ரத்தப் பிரிவை மற்றவருக்கு ஏற்றிவிட்டால் அது பிரச்னையாக மாறுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த  ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை  மருத்துவர் அருணா

ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை.

ரத்த வகைகளை A, B, O மற்றும் Rh போன்றவற்றை வைத்து வகைப்படுத்துகிறோம். இந்த ஒவ்வொன்றிலும் பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் பிரிவாக இருக்கலாம். இந்தியாவில் 10 ஆயிரம் பேரில் ஒருவருக்கு என்ற எண்ணிக்கையில் காணப்படும் மற்றொரு ரத்தப் பிரிவு பாம்பே பிளட் க்ரூப். 

ரத்த செல்லானது A ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது A க்ரூப். B ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது B க்ரூப். A  மற்றும் B   ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது AB க்ரூப். இரண்டையும் வெளிப்படுத்தால் H என்ற ஆன்டிஜென்னை வெளிப்படுத்தினால் அது O க்ரூப். அதையும் வெளிப்படுத்தாதபோது அது பாம்பே க்ரூப்.

O வகை ரத்தமும் பாம்பே வகை ரத்தமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தாலும் O வகை ரத்தத்தை பாம்பே க்ரூப் உள்ளவரது உடல் ஏற்காது. அவர்களுக்கு பாம்பே ரத்த வகை உள்ளவர்கள்தான் ரத்தம் கொடுக்க முடியும்.

O பிரிவு உள்ளவர்கள் எல்லோருக்கும் ரத்தம் கொடுக்கலாம், AB பிரிவு உள்ளவர்களுக்கு மற்ற எந்த வகை ரத்தமும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லப்பட்டாலும் அதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லை. 

ரத்தம் ஏற்றும் முன், தானமளித்தவரின் ரத்தப் பிரிவையும் தானம் பெறுபவரின் ரத்தப் பிரிவையும் பார்த்து, பொருந்திப் போனால்தான் ரத்தம் ஏற்றுவார்கள்.

எமர்ஜென்சி நேரத்தில் கவனக்குறைவாக  மாற்றிக்கொடுப்பது வேண்டுமானால் நடக்கலாம். மற்றபடி அந்தந்த ரத்தவகையைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த ரத்தவகை உள்ளவர்கள் தானம் கொடுப்பதுதான் சரியானது. அதை 'மேஜர் டிரான்ஸ்ஃபியூஷன் ரியாக்ஷன்'  (major transfusion reaction) என்று சொல்வோம். அது சீரியஸான விஷயம். சிறுநீரகச் செயலிழப்பு, மூச்சு அடைப்பது, ரத்த அழுத்தம் குறைவது, சிறுநீர் சிவப்பு அல்லது பிரவுன் நிறத்தில் வெளியேறுவது, குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் போன்றவை வரலாம்.

ரத்தம் ஏற்றும் முன், தானமளித்தவரின் ரத்தப் பிரிவையும் தானம் பெறுபவரின் ரத்தப் பிரிவையும் பார்த்து, பொருந்திப் போனால்தான் ரத்தம் ஏற்றுவார்கள். எனவே,  இன்று இதுபோன்ற தவறுகள் நிகழும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. எனவே, அது குறித்த பயம் தேவையற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Manmohan Singh: `திடீர் உடல் நலக்குறைவு; காலமானார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்'

இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 92 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.Manmohan Singhமன்மோகன் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்திருக்கிறார். அதேமாதிரி, 90 களில் நிதிய... மேலும் பார்க்க

விசிக, கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ்... மதுரையில் கலெக்டருக்கு எதிராக குற்றச்சாட்டு ஏன்?

மதுரை கலெக்டர் தங்களை அவமதித்து விட்டதாக விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் குற்றச்சாட்டியுள்ளது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் போராட்டம்திருமாவளவ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: ``திமுக யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது? வழக்கை CBI-க்கு..." - இபிஎஸ்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரன் ஆளும் திமுகவில் பொறுப்பில் இருப்பவர் என்ற பேச்சுகள் அடிபடும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்ட... மேலும் பார்க்க

``ஆண்டுக்கு ரூ.2.5 கோடி லாபம் கிடைக்குது..'' -உருளைக்கிழங்கு சாகுபடியில் ஜெயித்த பட்டதாரி விவசாயி

வேளாண் துறையில் பட்டப்படிப்புவிவசாயம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் பஞ்சாப் போன்ற சில மாநிலங்களில் விவசாயத்தை தங்களது தொழிலாக விருப்பத்துடன் சிலர் செய்து கொண்டிருக்கின்றனர். பஞ்சாப் மா... மேலும் பார்க்க

``நெஞ்சைப் பதற வைக்கிறது...'' - அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவத்திற்கு கனிமொழி கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு உள்ளான சம்பவம் நேற்று பரபரப்பை கிளப்பியது. இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், எப்.ஐ.ஆரில் அந... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்டென்ட், பைபாஸ் தேவையில்லையா... இதய நோயாளிகளைக் காப்பாற்றுமா EECP சிகிச்சை?

Doctor Vikatan: 'உங்களுக்கு நெஞ்சுவலி உள்ளதா, மூச்சுத்திணறல் உள்ளதா, ஆஞ்சியோபிளாஸ்டியோ, அறுவை சிகிச்சையோசெய்து கொள்ள பயமா... தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஈஈசிபி (EECP ) சிகிச்சையைச் செய்துகொள்ள எங்க... மேலும் பார்க்க