செய்திகள் :

Doctor Vikatan: தூக்கமின்மை பிரச்னை.... தற்காலிகமாக தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

post image

Doctor Vikatan: என் வயது 45. கடந்த சில மாதங்களாக எனக்கு சரியான தூக்கம் இல்லை. இது என் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கிறது. தற்காலிகமாக தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது தீர்வாக இருக்குமா... அது பழக்கமாக மாறிவிடுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.

ஸ்பூர்த்தி அருண்

‘‘தூக்க மாத்திரைகளைப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது இல்லை. நோயாளிக்கு தூக்கக் குறைபாடு இருக்கிறது என்பது போன்ற மிகவும் அரிதான சூழலில் மட்டுமே தூக்க மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார். 

தூக்க மாத்திரை நாளடைவில் அதன்மீது பழக்கத்தையும் உண்டாக்கிவிடும் வாய்ப்பும் உண்டு. ஒரு கட்டத்தில் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டால்தான் தூங்க முடியும் என்கிற சூழலும் உடலுக்குப் பழகிவிடும்.

இதில் இன்னொரு பிரச்னையாக ஏற்கெனவே கொடுக்கும் டோஸ் அளவு நாளடைவில் தூக்கத்தை வரவழைக்காமல் போகலாம். இதனால் டோஸ் அளவையும் அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவே, முடிந்தவரை தூக்க மாத்திரைகளைத் தவிர்க்கவே மருத்துவர்கள் முயற்சி செய்வார்கள். ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் எதனால் அந்தப் பிரச்னை வந்தது என்கிற காரணத்தைக் கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். 

தூக்க மாத்திரைகள்

மன அழுத்தம், பதற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். அதிக நேரம் எலக்ட்ரானிக் திரைகளைப் பயன்படுத்துவது, தூக்கத்தில் நேர ஒழுங்கின்மையைக் கடைப்பிடிப்பது போன்ற சாதாரண காரணங்களால்கூட தூக்கமின்மை ஏற்படலாம். எனவே, காரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை வழங்க வேண்டும். அப்படி வாழ்க்கைமுறை மாற்றங்களால் பலன் இல்லை என்கிற சூழலில் தூக்க மாத்திரைகள் கொடுப்பதாக இருந்தாலும் அதனை மிகவும் குறுகிய காலத்துக்கானதாக மட்டுமே மருத்துவர் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Doctor Vikatan: அடிக்கடி அவதிப்படுத்தும் வாய்ப்புண்கள்... நிரந்தர தீர்வு என்ன?

Doctor Vikatan:என் மகனுக்கு 20 வயதாகிறது. அவனுக்கு 10 நாள்களுக்கொரு முறை வாயில் புண்கள் வருகின்றன. என் கணவருக்கும் இதே பிரச்னை இருக்கிறது. வாய்ப்புண் என்பது பரம்பரையாகத் தொடருமா? இதற்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

`எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்' நோயாளி, முன்னாள் அமைச்சர் விமர்சனம்... மருத்துவ அதிகாரி விளக்கம்!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிபாண்டி. இவர் உணவகம் ஒன்றில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், காளிபாண்டி டூவீலரில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்தில... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு... இரண்டு கைகளிலும் மாறி மாறி வருமா?

Doctor Vikatan:எனக்கு ஒரு வருடத்துக்கு முன்பு இடப்பக்கத்தில் ஃப்ரோஸன் ஷோல்டர் (Frozen Shoulder) பாதிப்பு வந்தது. இப்போதுதான் அது குறைய ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வலது பக்க கையில் அதே வலி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 10 வயது சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல்... சித்த மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என்10 வயது மகனுக்கு அடிக்கடி சளி, இருமல் வருகிறது. ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் காட்டி, மாத்திரைகள் கொடுக்கிறோம். ஆனாலும் நிரந்தர தீர்வு இல்லை. சளி, இருமல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு... மேலும் பார்க்க

Doctor Vikatan: நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (pre-diabetes) மாத்திரைகள் எடுக்க வேண்டுமா?

Doctor Vikatan:சமீபத்தில் செய்த ரத்தப் பரிசோதனையில் எனக்கு ப்ரீடயாபட்டிஸ் (pre-diabetes) என்று வந்திருக்கிறது. இதற்கு இப்போதே மருந்துகள் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டுமா? ப்ரீ டயாபட்டிஸுக்கு மருந்துக... மேலும் பார்க்க

Doctor Vikatan: மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?

Doctor Vikatan: கடந்த சில நாள்களாகமுதுகுவலிக்கானமருந்துகள் எடுத்து வருகிறேன். அந்த மருந்துகள் எடுக்க ஆரம்பித்ததும்எனக்கு வாய்ப்புண்கள் அதிகமாகிவிட்டன. மருந்துகளுக்கும் வாய்ப்புண்களுக்கும் தொடர்பு உண்ட... மேலும் பார்க்க