செய்திகள் :

Doctor Vikatan: நமக்கே தெரியாமல் ஹார்ட் அட்டாக் வந்துபோயிருக்க வாய்ப்பு உண்டா..?

post image

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 70 வயதாகிறது. சமீபத்தில் அவருக்கு ஃபிராக்சர் ஆனதற்காக மருத்துவமனை அழைத்துச் சென்றோம். பரிசோதனைகள் செய்தபோது அவருக்கு ஏற்கெனவே ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக மருத்துவர் சொன்னார். எங்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என் மாமனாருக்கு இதுவரை ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரியவில்லை. அவர் எந்த அசௌகர்யத்தையும் உணரவில்லை. ஆனாலும் மருத்துவர் இப்படிச் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வது... ஒருவருக்கு அறிகுறிகளே இல்லாமல் ஹார்ட் அட்டாக் வந்து போயிருக்க வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மாரடைப்பின் அறிகுறி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என அவசியமில்லை. சிலருக்கு அறிகுறிகள் எதையும் காட்டாமல் வரலாம். சிலருக்கு அது வித்தியாசமான அறிகுறிகளைக் காட்டலாம்.

உதாரணத்துக்கு,  நெஞ்செரிச்சல், முதுகுவலி, கைகளில் மட்டும் குடைச்சல், தாடையில் வலி போன்ற அறிகுறிகளாகவும் வெளிப்படலாம். அது ஹார்ட் அட்டாக்கின் அறிகுறி என்பதை உணராமலேயே சிலர் அதிலிருந்து மீண்டிருப்பார்கள். இது போன்ற அறிகுறிகள் நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகம் வரலாம். 

உங்கள் மாமனாருக்கு மாரடைப்பு வந்ததாக மருத்துவர் சொன்னது நிச்சயம் உண்மையாக இருக்கலாம். மாரடைப்பு என்றதுமே தாங்க முடியாத நெஞ்சுவலி, வலது தோள்பட்டையில் வலி, அது கைகளுக்குப் பரவுதல் போன்ற பிரதான அறிகுறிகள் நிச்சயம் இருக்கும் என பலரும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சிலருக்கு அறிகுறிகளே இருக்காது. ஆனால், ரத்தக்குழாய் மூடியிருக்கும். வேறொரு சந்தர்ப்பத்தில் இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும். குறிப்பிட்ட ஒரு பகுதி சரியாகச் செயல்படாமலேயோ, இசிஜியில் அந்தப் பகுதியில் வித்தியாசமான மாறுதல்கள் இருப்பதோ தெரியவரும்.

இசிஜியோ, எக்கோவோ எடுக்கும்போது ஏற்கெனவே பாதித்த ஹார்ட் அட்டாக் பற்றி அதில் தெரியவரும்.

எனவே, உங்கள் மாமனாருக்கு ஏற்கெனவே மாரடைப்பு வந்திருப்பதால் இனி நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது மிக முக்கியம். மாமனாருக்கு எந்தெந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு இருக்கிறது என பரிசோதனை செய்து பார்க்கவும் உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியிருப்பார்.  அதன்படி தேவையான டெஸ்ட்டுகளை செய்துபார்த்து மருத்துவர் சொல்லும் சிகிச்சைகளைப் பின்பற்றச் சொல்லுங்கள். மீண்டும் இதே பாதிப்பு வராமல் தடுப்பதற்கான விஷயங்களைப் பின்பற்ற அறிவுறுத்துங்கள். அதை 'செகண்டரி ப்ரிவென்ஷன்' (Secondary prevention) என்று சொல்வோம். உணவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் அவரை கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

`நிதி நெருக்கடி' - மதுபான விலையை 85% வரை உயர்த்திய மகாராஷ்டிரா அரசு; அதிர்ச்சியில் மது பிரியர்கள்

மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை... மேலும் பார்க்க

Amit shah-வின் Strict உத்தரவு - ஆடிப்போன தமிழ்நாடு BJP நிர்வாகிகள் | Off the Record

மதுரைக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் Amit sha,TN BJP நிர்வாகிகளுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பிதிருக்கிறார். மேலும் DmK அரசுக்கு செக் வைக்கும் வகையில் ஒரு முக்கிய சிக்னலையும் செய்திருக்கிறார். அது ... மேலும் பார்க்க

`திமுக அமைச்சருக்கு ரூபாய் மாலை; புஸ்ஸிக்கு வெறும் சால்வை' - விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட தவெக மா.செ.!

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் பாரதிதாசன். இவர், திருவண்ணாமலை தியாகி அண்ணாமலை நகரில் புதிதாக வீடு கட்டியிருக்கிறார். கடந்த 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புதுமனை புகுவிழாவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்தால் டான்சில்ஸ் பிரச்னை வருமா?

Doctor Vikatan: என்குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் சாக்லேட்டும் எப்போதாவது ஐஸ்கிரீமும் சாப்பிடுவான். அவனுக்குஅடிக்கடி காய்ச்சல் வருகிறது, சளி பிடித்துக்கொள்கிறது. அவனுக்குடான்சில்ஸ் எனப்படும் தொண்டை... மேலும் பார்க்க

``கடல் விற்பனைக்கு இல்லை; ஆழ்கடல் சுரங்கத்துக்கு தடை..'' - டிரம்புக்கு எதிராக ஐ.நா-வில் ஒலித்த குரல்

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் ஜூன் 9-ம் தேதி ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாடு தொடங்கியது.ஜூன் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த மாநாட்டில... மேலும் பார்க்க

Health: நியூஸ் பேப்பரில் பஜ்ஜி, போண்டா வைத்து சாப்பிடுகிறீர்களா? - எச்சரிக்கும் மருத்துவர்

உங்களுக்கு சாலையோரம் விற்கப்படும் பஜ்ஜி மற்றும் போண்டாவை சாப்பிடும் பழக்கம் உள்ளதா? அப்படி நீங்கள் சாப்பிட்டால் அங்கே பயன்படுத்திய செய்தித்தாளில் உணவு பொருள்களை வைத்து கொடுப்பார்கள். வேறு வழி இல்லை என... மேலும் பார்க்க